/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவிலில் முன்மண்டபம் அமைப்பு
/
மாகாளியம்மன் கோவிலில் முன்மண்டபம் அமைப்பு
ADDED : டிச 16, 2025 06:54 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட, 6வது வார்டு மதுரைவீரன் கோவில் வளாகத்தில் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு முன்மண்டபம் கட்ட வேண்டும் என நிர்வாகிகள், கோவில் பக்தர்கள் எதிர்பார்ப்பாக இருந்தது.
இதையடுத்து, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி மற்றும் யு.என்.கே. குடும்பத்தினர், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய முன்மண்டப கட்டடத்தை அமைத்து கொடுத்தார். நேற்று புதிய முன் மண்டப திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் தலைமை வகித்தார். ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

