/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
/
நான்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ADDED : அக் 21, 2024 03:49 AM

கோவை : கோவையில் பாலியல் தொல்லை வழக்கு குற்றவாளிகள் இருவர் உட்பட, நான்கு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் பாலியல் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய விஷ்ணு, 27, சுரேஷ் 41, கோவில்பாளையம் பகுதியில் தொடர் வழக்கில் ஈடுபட்ட நந்தகுமார், 22, பேரூர் பகுதியில் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கில், கேரளாவை சேர்ந்த பிரவீன், 38 ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், நான்கு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் கிராந்தி குமார், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நான்கு குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் இந்ததாண்டு மட்டும், 58 குற்றவாளிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.