sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகள் குரலுக்கு செவிசாய்ப்பதில் பாராமுகம் இடைவெளி... இடைவிடாத வலி! நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் 'அந்த ஒருவர்'

/

விவசாயிகள் குரலுக்கு செவிசாய்ப்பதில் பாராமுகம் இடைவெளி... இடைவிடாத வலி! நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் 'அந்த ஒருவர்'

விவசாயிகள் குரலுக்கு செவிசாய்ப்பதில் பாராமுகம் இடைவெளி... இடைவிடாத வலி! நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் 'அந்த ஒருவர்'

விவசாயிகள் குரலுக்கு செவிசாய்ப்பதில் பாராமுகம் இடைவெளி... இடைவிடாத வலி! நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் 'அந்த ஒருவர்'


ADDED : நவ 11, 2025 12:11 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்: கிராமந்தோறும் ஒரு வேளாண் அதிகாரி. விவசாயிகளின் எதிர்பார்ப்பு எப்போது பூர்த்தி செய்யப்படும் என தெரியாததால், அரசின் திட்டங்கள் அறியாமல், ஆலோசனை பெற முடியாமல், தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், விவசாயிகளின் மேம்பாட்டுக்கு, பல வேளாண் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அமலில் உள்ளன. மத்திய அரசின் சார்பில், பி.எம்.கிசான், தேசிய பயிர் காப்பீடு திட்டம், சொட்டு மற்றும் நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில அரசின் பல திட்டங்கள் வாயிலாக, விவசாயிகள் பயன்பெறுகின்றனர். ஆனால், அரசுகளின் பல திட்டங்கள், விவசாயிகளுக்கு சென்றடையாத நிலை இன்றும் உள்ளது. அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே, அதிக இடைவெளி ஏற்பட்டிருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

பருவ நிலை மாற்றங்களால், ஒவ்வொரு பகுதியிலும், வெவ்வேறு விதமான நோய் தாக்குதலுக்கு பயிர்கள் உள்ளாகி பாதிக்கின்றன. பாதிப்பை சரி செய்ய உரிய ஆலோசனை, உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. இதனால், பயிர்களை காப்பாற்றும் நோக்கில், விவசாயிகள் தன்னிச்சையாகவும், தனியாரிடமும் ஆலோசனை பெற வேண்டிய நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது.

ஒரு சில சமயம் கைகொடுக்கும் இதுபோன்ற ஆலோசனை, பல நேரம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆக. மாதத்தில் சுல்தான்பேட்டை பகுதி விவசாயி ஒருவர், உரிய ஆலோசனையின்றி, தென்னை மரங்களுக்கு மருந்திட்டு, அதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு திட்டங்களை விவசாயிகளுக்கு விளக்கவும், தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவும், விவசாயிகளின் பிரச்னை, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், கிராமந்தோறும் ஒரு வேளாண் அதிகாரியை நியமிக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

இதுகுறித்து, விவசாயி ரவிக்குமார் கூறியதாவது:

அரசின் வேளாண் அறிவிப்புகள், முறையாக விவசாயிகளுக்கு தெரிவதில்லை. திட்டங்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறோம். அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்பட்டுள்ளது. வட்டார அளவில் உள்ள அதிகாரிகளுக்கு, மீட்டிக்கில் பங்கேற்கவே நேரம் சரியாகி விடுகிறது. மீதியுள்ள நேரங்களில், அவர்கள் களத்துக்கு வருவதே அரிதாகி விட்டது. அப்படியே வந்தாலும், அவர்கள் விவசாயிகளுடன் அறிமுகமாகி சகஜமாக பழகுவதற்குள், பணியிட மாறுதலாகி சென்று விடுகின்றனர்.

அதனால், ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வேளாண் அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். அப்படி நியமித்தால், அந்த அதிகாரி அடிக்கடி களத்துக்கு வந்து விவசாயிகளை சந்தித்து உரிய ஆலோசனை வழங்க முடியும். நாங்களே சென்று அதிகாரியை சந்தித்து சந்தேகத்தை கேட்டு பயன் பெறுவோம். மூன்றாண்டுகளுக்கு முன், கிராமந்தோறும் அதிகாரி நியமிக்கப்படுவார் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை அது செயல்பாட்டுக்கு வரவில்லை. கிராமந்தோறும் அதிகாரியை நியமித்தால் தான் விவசாயிகளின் சிரமம் குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us