தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை

செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை

செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை


UPDATED : ஆக 26, 2026 05:58 PM

ADDED : ஆக 26, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2026 05:58 PM ADDED : ஆக 26, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முருகனுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால், வீட்டில் பணத்தட்டுப்பாடு வராது.

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற முடியும்.

கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும் செவ்வாய்க்கிழமையில் சேர்ந்து வந்தால், அது இன்னும் சிறப்பு. ஆடி கிருத்திகையில் முருகனை வழிபடுவது விசேஷமானது. முருகனை தினசரி நம் வீட்டில் வழிபட வேண்டும் என்றால், அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி, தெய்வானையுடன் நம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த சுவாமி படத்திற்கு முன்னால் ஓம் சரவணபவ என்ற எழுத்தினை அரிசி மாவால் கோலமிட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு. ஆனால் தினசரி ஆறு விளக்குகள் ஏற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், ஒரு விளக்கினை ஏற்றி வைத்து, நைவேத்தியமாக பழங்கள், கற்கண்டு, உலர் திராட்சை இவைகளில் ஏதாவது ஒன்று படைத்து, முருகனை பூக்களால் அலங்கரித்து தீப தூப கற்பூர ஆரத்தியில் முருகனை பூஜை செய்யலாம். முருகப்பெருமானுக்கு உகந்த பூக்களை சமர்ப்பிப்பது இன்னும் சிறப்பாகும்.

சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் முருகன். சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ண என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்ற பொருளில் மங்களம், ஒளிகொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பு இயல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

உங்களால் முடிந்தால் கந்த சஷ்டி கவசத்தை, வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமையில் படிப்பது நல்லது. படிக்க முடியாத பட்சத்தில் உங்கள் வீட்டில் ஒலிக்கச் செய்து, காதால் கேட்பது மூலமும் நல்ல பலன் கிடைக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், திருமண தடை உள்ளவர்களும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலும், மாதம் தோறும் சஷ்டியிலும், முருகனை நினைத்து விரதம் இருந்தால், இந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். அழகன் முருகனை நினைத்து, நாம் மனதார வழிபடும் ஒவ்வொரு வழிபாடும், நமக்கு பலனை அள்ளித் தரும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us