/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொறியாளர் பிரிவால் அரசுக்கு கெட்ட பெயர்! கவுன்சில் கூட்டத்தில் பகிரங்க புகார்
/
பொறியாளர் பிரிவால் அரசுக்கு கெட்ட பெயர்! கவுன்சில் கூட்டத்தில் பகிரங்க புகார்
பொறியாளர் பிரிவால் அரசுக்கு கெட்ட பெயர்! கவுன்சில் கூட்டத்தில் பகிரங்க புகார்
பொறியாளர் பிரிவால் அரசுக்கு கெட்ட பெயர்! கவுன்சில் கூட்டத்தில் பகிரங்க புகார்
ADDED : அக் 16, 2025 08:43 PM

பொள்ளாச்சி: 'தெருவிளக்கு பராமரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்,' என, நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சியில், சாதாரண கூட்டம் தலைவர் சியாமளா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் கவுதமன், இரண்டு தனிநபர் தீர்மானங்கள் கொண்டு வந்து பேசியதாவது:
தற்போது நகரில், 300க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. கோவை ரோடு, புதிய திட்ட சாலை, பாலக்காடு ரோடு, திருவள்ளுவர் திடல், கோட்டூர் மேம்பால சாலைகளில் தெருவிளக்குகள் முழுமையாக எரிவதில்லை.
இதனால், பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.எனவே, நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு நிறுவனத்துக்கு புதிய ஒப்பந்த பணியை வழங்க வேண்டும்.
நகரில்,குடிசைப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க, மேலும் இரண்டு லாரிகள் வாங்க வேண்டும். தனியார் மனைப்பிரிவுகளில் புதர்கள் மண்டி கிடக்கிறது. அவற்றை பொக்லைன் வாயிலாக சுத்தம் செய்ய பொக்லைன் இயந்திரம் வாங்க வேண்டும்.
செந்தில்குமார் (தி.மு.க.): ஜோதிநகரில், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. அம்பராம்பாளையத்தில் மின் வெட்டு, மோட்டார் பழுது போன்ற காரணங்களை கூறினாலும் மக்கள் ஏற்பதில்லை.
கமிஷனர்: குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து மின் மோட்டார் பழுது பார்த்து தடையின்றி, குடிநீர் வினியோகிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
துணை தலைவர்: பொறியாளர் பிரிவு செயல்படாமல் உள்ளது. இங்குள்ள எம்.இ. மற்றும் இணை பொறியாளர் எதையும் கண்டு கொள்வதில்லை.பொறியாளர் பிரிவால் அரசுக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. எம்.இ. மற்றும் ஜெ.இ. மீது நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்கு கண்டன தீர்மானம் கொண்டு வருகிறேன்.
ஜேம்ஸ் ராஜா (அ.தி.மு.க.): எம்.இ. பணிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. அவர் பணி செய்யாவிட்டால் ஆளுங்கட்சியாக உள்ள நீங்களே அரசுக்கு தெரிவித்து மாற்ற நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
தலைவர்: ஆர்.டி.எம்.ஏ.விடம் தெரிவித்துள்ளோம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கமிஷனர்: கவுன்சிலர்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். பொறியாளர் பிரிவில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எம்.இ. ஜெ.இ. மீது கவுன்சிலர்கள் கூறிய புகார்களை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன்.
மின் விளக்குகள் பிரச்னை சரி செய்ய ஒப்பந்ததாரரிடம் கடுமையாக தெரிவித்துள்ளேன். பொது சுகாதாரம், குடிநீர், கால்வாய் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மரக்கழிவுகள் முறையாக அகற்றி, மக்க வைத்து மியாவாக்கி பூங்காவில் உள்ள மரங்களுக்கு உரமாக இடப்படுகிறது.
ஜேம்ஸ்ராஜா: தேர்நிலையம் மார்க்கெட்டில், ஹிந்துசமய அறநிலையத்துறை இடத்தில் உரிய அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் எட்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது. வரும், 26ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைகிறது. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, நடவடிக்கைக்கு ஏன் காலம் தாழ்த்தப்படுகிறது.
நகரமைப்பு அதிகாரிகள்: ஹிந்துசமய அறநிலையத்துறை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவுப்படி இரு துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜேம்ஸ்ராஜா: தெருநாய்கள் தொல்லை அதிகமுள்ளது. அவற்றால் ரோட்டில் நடந்து செல்வோருக்கும், வாகனங்களில் செல்வோருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
தாமரைக்கண்ணன், நகர் நல அலுவலர்: நாய்களை பிடித்து கருத்தடை செய்ய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அதே போன்று பன்றிகள் வளர்ப்போருக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலமுருகன் (தி.மு.க.): நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்தை பாதுகாக்கவேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்படும் ரோடுகளில் 'பேட்ச் ஒர்க்' பணிகள் மேற்கொள்ள வேண்டும். பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் அளவை குறைத்து ரோடு அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.