sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கும்பாபிேஷக விழா கோலாகலம்

/

கும்பாபிேஷக விழா கோலாகலம்

கும்பாபிேஷக விழா கோலாகலம்

கும்பாபிேஷக விழா கோலாகலம்


ADDED : டிச 12, 2024 11:22 PM

Google News

ADDED : டிச 12, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 2010, டிச., 12ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது. 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மகா கும்பாபிேஷகம் நடந்தது.

 கும்பாபிேஷக விழாவையொட்டி, மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசிக்க காத்திருந்தனர்.

 ராஜகோபுர விமான கலசம், மூலஸ்தான கோபுர விமான கலசத்துக்கு புனித நீர் தெளிக்கப்பட்டதை கண்டு பரவசமடைந்த பக்தர்கள், 'மாசாணி தாயே...' என கோஷமிட்டு, வணங்கினர்.

 மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், இரண்டாம் ஸ்தானீகம் ராஜா பட்டர் தலைமையில், சிவாச்சாரியார்கள், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, தீபாராதனை காண்பித்தனர்.

 கோபுர தரிசனம் காண காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, 'ட்ரோன்' வாயிலாக, புனித நீர், தெளிக்கப்பட்டது.

 வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., பக்தர்கள் நிற்க தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

 முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, கந்தசாமி, கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

 அமைச்சர்கள், விமான கோபுரத்துக்கு சென்ற சிறிது நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை மூலஸ்தான கோபுரத்துக்கு வருமாறு அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்று, எம்.எல்.ஏ.,க்கள் மேலே சென்றனர்.

 கோவில் சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 கோவில் கோபுரங்கள், கோவில் உட்புறங்கள் அனைத்தும் பூக்களால் அலங்கரிப்பட்டு இருந்தன.

 வர்ணணையாளர் மங்கையர்கரசி, கும்பாபிேஷக வர்ணணை செய்தார். பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், அம்மன் பாடலை பாடியதும், பக்தர்கள் கைதட்டி பரவசப்படுத்தினர்.

 போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் நிறுத்தப்பகுதியை தாண்டிச் செல்ல யாரையும் போலீசார் அனுமதிக்காததால், கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.

 கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கோவில் அறுங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து, தங்கமணி, செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us