/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளுகுளு சீசன் துவங்கியது; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
/
குளுகுளு சீசன் துவங்கியது; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
குளுகுளு சீசன் துவங்கியது; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
குளுகுளு சீசன் துவங்கியது; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
ADDED : டிச 18, 2024 08:20 PM

வால்பாறை; வால்பாறையில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
ஆழியாறு பூங்கா, கவியருவி, அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வியூ பாயின்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணியர் அதிக அளவில் கண்டு ரசிக்கின்றனர்.
வால்பாறையில்பருவமழைக்கு பின், கடந்த ஒரு வாரமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காலை, மாலை நேரங்களில் நிலவும் பனிமூட்டத்தை சுற்றுலாபயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுவதால் 'ரிசார்ட்'களில் தங்கி செல்லும் சுற்றுலா பயணியர் தீ மூட்டி உடலை சூடுபடுத்திக்கொள்கின்றனர். குளுகுளு சீசன் நிலவுவதால், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகின்றனர்.
சுற்றுலா பயணியர் கூறுகையில், 'வால்பாறையில் குளிர் காற்றுடன் கூடிய பனிப்பொழிவு நிலவுகிறது. சமவெளிப்பகுதியில் இருந்து வருவோருக்கு இந்த சீதோஷ்ண நிலை மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சீதோஷ்ண நிலை நான்கு மாதங்களுக்கு நீடிக்கும்.
சக்தி தலார் வியூ பாயின்ட், வால்பாறை நகரில் உள்ள படகு இல்லம், பூங்கா, நல்லமுடி பூஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை சார்பில் கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காதது அதிருப்தியளிக்கிறது,' என்றனர்.