sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மெட்ரோவுக்காக நெடுஞ்சாலைத்துறை காத்திருந்தது போதும்! சரவணம்பட்டியில் கட்டணும் மேம்பாலம்

/

மெட்ரோவுக்காக நெடுஞ்சாலைத்துறை காத்திருந்தது போதும்! சரவணம்பட்டியில் கட்டணும் மேம்பாலம்

மெட்ரோவுக்காக நெடுஞ்சாலைத்துறை காத்திருந்தது போதும்! சரவணம்பட்டியில் கட்டணும் மேம்பாலம்

மெட்ரோவுக்காக நெடுஞ்சாலைத்துறை காத்திருந்தது போதும்! சரவணம்பட்டியில் கட்டணும் மேம்பாலம்


ADDED : பிப் 25, 2026 05:50 AM

Google News

ADDED : பிப் 25, 2026 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசின் முடிவுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை காத்திருக்கிறது. நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகமாகி வருவதால், மேம்பாலம் கட்டுமானத்தை உடனடியாக துவங்க வேண்டும்.

கோவை - சத்தி ரோட்டில் அம்மன் கோவிலில் துவங்கி, சரவணம்பட்டி வரை 1,415 மீட்டர் துாரத்துக்கு நான்கு வழி மேம்பாலம் கட்ட, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதே வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்க ஆலோசித்து இருப்பதால், மேம்பாலப் பணி முடங்கி இருக்கிறது.

மெட்ரோ திட்டம் தற்போதைய சூழலில் சாத்தியம் இல்லை என்கிற நிலை உள்ளதால், ரூ.12 கோடியில் சரவணம்பட்டி சந்திப்பு, காளப்பட்டி சந்திப்பை மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்திருக்கிறது.

நாளுக்கு நாள் இவ்வழித்தடத்தில், வாகனங்கள் பெருக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலை சந்திப்புகளை கடக்க மக்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே மேம்பாலம் கட்ட வேண்டியது கட்டாயம்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கி 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்று, மேம்பாலத்தை கட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கை.

தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:

ஒரே இடத்தில் ரோட்டை அகலப்படுத்த ஒருமுறையும், மெட்ரோவுக்கு இன்னொரு முறையும் என, இரண்டு முறை கையகப்படுத்தினால், பொதுமக்கள் அதிருப்தி அடைவர். இப்போதைக்கு பாலத்தை மட்டும் கட்டுங்கள் என, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'நிதியை வீணடிக்காதீர்'


சரவணம்பட்டி மேம்பாலத் திட்டத்தை கைவிடக்கூடாது என கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் மேம்பாலம் கட்டாமல், சந்திப்புகளை மேம்படுத்துவது நிதியை வீணடிப்பதாகும். சாலை சந்திப்பை மேம்படுத்துவதை கைவிட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக மேம்பாலம் கட்ட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.








      Dinamalar
      Follow us