/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இக்கணம் தேவை சிக்கனம்!அணைகளின் நீர் மட்டம் சரிவு...
/
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இக்கணம் தேவை சிக்கனம்!அணைகளின் நீர் மட்டம் சரிவு...
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இக்கணம் தேவை சிக்கனம்!அணைகளின் நீர் மட்டம் சரிவு...
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு இக்கணம் தேவை சிக்கனம்!அணைகளின் நீர் மட்டம் சரிவு...
UPDATED : மார் 01, 2024 02:25 AM
ADDED : மார் 01, 2024 02:02 AM

கோவை;வெயில் தாக்கம் அதிகரிப்பு, பருவமழை கைகொடுக்காததன் காரணமாக, சிறுவாணியின் நீர் மட்டம், 22 அடியாக சரிந்துள்ள சூழலில், பில்லுார் அணையின்நீர் மட்டமும், 64 அடியாக குறைந்துள்ளது.
இதனால், பொது மக்கள் தண்ணீர் சிக்கனத்தை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மக்களின் குடிநீர் தேவையை சிறுவாணி, அத்திக்கடவு, பவானி உள்ளிட்ட நீராதாரங்கள் பூர்த்தி செய்துவருகின்றன. தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு இந்த அணை முக்கிய ஆதாரமாக உள்ளது.
தமிழக-கேரள மாநில ஒப்பந்தப்படி கோவைக்கு தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீரை கேரளா தர வேண்டும். ஆனால், பருவ மழை பெய்தாலும், 45 அடிக்கு மேல் தண்ணீர் தேங்காது கேரள அதிகாரிகள் ஆற்றில் வெளியேற்றுகின்றனர். பருவ மழை கை கொடுக்காததால் கடந்த மாத துவக்கத்தில் அணையின் நீர் மட்டம், 26 அடியாக இருந்தது.
தண்ணீர் இருந்தும், ஆழியாற்றில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் வழங்கும் விஷயத்தில் தமிழக அரசை பணியவைப்பதற்காக, 3.5 கோடி லிட்டர் தண்ணீரை வழங்கியது.
தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கேரள அதிகாரிகள் கடந்த மாதம், 20ம் தேதி முதல், 5.5 கோடி லிட்டராக அதிகரித்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், அணையின் நீர் மட்டம் தற்போது, 22 அடியாக குறைந்துள்ளது. பில்லுார் அணையின் நீர் மட்டமும், 64 அடியாக சரிந்துள்ளது. நபருக்கு நாளொன்றுக்கு, 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கும் விதமாக பில்லுார்-3 திட்டமும் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இத்திட்டத்திலும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியிருக்க பருவ மழை கை கொடுக்காததால் இந்த அணையின் நீர் மட்டமும் வெகுவாக சரிந்துவருகிறது.
இதனால், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோக இடைவெளி, 15 நாட்களாக அதிகரித்துள்ளது. கோடையும் நெருங்கும் நிலையில் பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிக்கன நடவடிக்கை!
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'இரண்டு அணைகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. மழை பெய்தால் மட்டுமே பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்ற நிலையில் சிறுவாணியில் இருந்து தினமும், 5 கோடி லிட்டர் மட்டுமே தற்போது எடுக்கப்படுகிறது. எனவே, சிக்கன நடவடிக்கையை இப்போதிருந்தே மக்கள் கையாள வேண்டுகிறோம்' என்றனர்.

