/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச பொறியியல் கண்காட்சி: மார்ச் 4ல் கோவையில் துவக்கம்
/
சர்வதேச பொறியியல் கண்காட்சி: மார்ச் 4ல் கோவையில் துவக்கம்
சர்வதேச பொறியியல் கண்காட்சி: மார்ச் 4ல் கோவையில் துவக்கம்
சர்வதேச பொறியியல் கண்காட்சி: மார்ச் 4ல் கோவையில் துவக்கம்
ADDED : மார் 01, 2024 02:36 AM
கோவை:பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் இந்தியா(இ.இ.பி.சி.) சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியை கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் மூன்று நாட்களுக்கு நடத்துகிறது.
இ.இ.பி.சி., தேசிய மண்டல தலைவர் ராமன்ரகு, கோவை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர்,துணை ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரி, வர்த்தகமேம்பாட்டு இயக்குனர் குருவிந்தர் சிங் மற்றும் சி.என்.நாடிகர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் இந்தியாவின் ஆண்டு நிகழ்வான சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சியின் பதினோராவது நிகழ்ச்சி கோவை - அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி மையத்தில் மார்ச் 4ல் துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது.
உலோகம், உலோகம் சார்ந்த பொறியியல் துறையில் நம் நாட்டின் திறன்களை சர்வதேச கொள்முதலாளர்களுக்கு எடுத்துக்காட்டவும், நம் நாட்டிற்குள் புதிய சந்தைகளை உருவாக்கவும், நம் நாட்டு வர்த்தக கூட்டாளிகளுக்கிடையேயான வணிக உறவுகளை வலுப்படுத்தவும்,வெளிநாட்டு சந்தையில் நம் திறன்களையும் வளங்களையும் காட்சிப்படுத்தவும்,
நமது உள்நாட்டு பொறியியல் திறன்களை உலகத்துக்கு எடுத்துக்காட்டவும், இந்த சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி வாய்ப்பாக இருக்கும்.
13 அறிவுசார் கருத்தரங்குகள் நடக்கிறது. இதில் ஜெர்மனியின் சாக்சன் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தலைமையிலான குழு பங்கேற்கிறது. பாதுகாப்பு உற்பத்தித்துறை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்(டிட்கோ) டாடா ஸ்டீல், சீமென்ஸ், ஜாகுவார், லேண்டுரோவர்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், ஓ.என்.டி.சி., ஜெர்மன் கிளாஸ், ஆட்டோமேஷன் அசோசியேசன், ஏதர், சி.எம்.டி.ஐ.,-பெங்களூர், சி.எஸ்.ஐ.ஆர்., சி.ஆர்.ஆர்.ஐ., மின்வாகன கூட்டமைப்பு, எஸ்.எஸ்.இ.எம்., ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மேலும் 139 உற்பத்தியாளர்கள், 149 பொறியியல் பொருட்களை காட்சிப்படுத்துவர், 10,000 வர்த்தகர்கள், 40 நாடுகளை சேர்ந்த 300 வெளிநாட்டு கொள்முதலாளர்கள் வருகை தருவர்.
உற்பத்தி ஸ்டார்ட் அப்கள், தொழில்நுட்ப உரைகள், திறன்மிகு உற்பத்திக்கான பட்டறைகள், சர்வதேச கொள்முதல் சந்திப்புகள் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் பிரச்னைகளை தீர்க்கும் ஆலோசனைகள் இடம் பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

