sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லேடி கவுன்சிலர் கட்டுறாரு மாடிக்கு மேல மாடி ஜெ., பார்முலாவை 'பாலோ' பண்றாரு மாஜி!

/

லேடி கவுன்சிலர் கட்டுறாரு மாடிக்கு மேல மாடி ஜெ., பார்முலாவை 'பாலோ' பண்றாரு மாஜி!

லேடி கவுன்சிலர் கட்டுறாரு மாடிக்கு மேல மாடி ஜெ., பார்முலாவை 'பாலோ' பண்றாரு மாஜி!

லேடி கவுன்சிலர் கட்டுறாரு மாடிக்கு மேல மாடி ஜெ., பார்முலாவை 'பாலோ' பண்றாரு மாஜி!


ADDED : ஜன 28, 2025 07:49 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகர்வலம் சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பிய சித்ராவுக்கு, பில்டர் காபி கொடுத்து வரவேற்றாள் சித்ரா.

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்த மித்ரா, காபி கோப்பையை உறிஞ்சியபடி, ''ஒரு பெண் காவலர் மயங்கி விழுந்துட்டாங்க... தெரியுமா...'' என, ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார்.

''என்னப்பா... எங்கே நடந்துச்சு... பதட்டப்படாம சொல்லு...'' என, கேட்டாள் சித்ரா.

''அக்கா... மாவட்ட நிர்வாகம் சார்புல வ.உ.சி., மைதானத்துல குடியரசு தின விழா நடந்துச்சு. வெயில் கடுமையா இருந்துச்சு; போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பார்வையிட்ட சமயத்துல, ஒரு பெண் காவலர் மயங்கி விழுந்துட்டாரு; சக காவலர்கள் அவரை தாங்கிப் பிடிச்சு, முதலுதவி கொடுத்திருக்காங்க,''

''ஆபீசர்ஸ் என்கொயரி செஞ்சப்போ, அணிவகுப்புக்கு வந்த பெண் காவலர்கள், விடியற்காலை, 5:00 மணிக்கே எழுந்திரிச்சிருக்காங்க; 6:30 மணிக்கு கிரவுண்ட்டுக்கு வந்து, பயிற்சி எடுத்திருக்காங்க. காலைல எதுவும் சாப்பிடாம இருந்திருக்காங்க; தண்ணியும் குடிக்காம இருந்திருக்காங்க,''.

கொடியேற்றுவதில் போட்டி


''பாரதியார் யுனிவர்சிட்டியில யார் கொடியேத்துறதுன்னு பதிவாளருக்கும், துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினருக்கும் இடையே, கவுரவப் பிரச்னை ஏற்பட்டுச்சாமே...''

''அந்த கூத்தை ஏன் கேக்குறீங்க... பதிவாளர் கொடியேத்தப் போறதா, ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தாங்க; துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினரும் கொடியேத்தப் போறதா அறிக்கை வெளியாச்சு. ரெண்டு அறிக்கையுமே, யுனிவர்சிட்டியில இருந்தே அதிகாரப்பூர்வமா வெளியாச்சு,''

''இது, சமூக வலைதளத்துல வைரல் ஆனதும், உயர்கல்வித்துறை உயரதிகாரிங்க 'என்கொயரி' செஞ்சு, துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினரை கொடியேத்தச் சொல்லியிருக்காங்க... பாரதியார் யுனிவர்சிட்டியில நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமா போயிட்டு இருக்குங்கிறதுக்கு இதுவே சாட்சியாகிடுச்சு...''

கவுன்சிலரின் மாடி வீடு


''அடக்கொடுமையே...'' என்ற சித்ரா, ''மித்து, கம்யூ., கட்சியை சேர்ந்த 'லேடி' கவுன்சிலர் ஒருத்தரு, குட்டை புறம்போக்குல வீடு கட்டி, குடும்பத்தோட வசிச்சிட்டு வர்றாராம். கவுன்சிலரானதும் வசதி பெருகிடுச்சு போலிருக்கு; இப்போ, மேல்மாடி எடுத்து கட்டியிருக்காருன்னு, சக கவுன்சிலர்கள் காதைக் கடிக்கிறாங்க,''

''நீர் நிலை புறம்போக்குல வீடு கட்டக் கூடாதுங்கிறது ரூல்; அதை மீறி கவுன்சிலரே வீடு கட்டியிருக்கறது, விவாதப் பொருளா மாறியிருக்கு. நீர் நிலை புறம்போக்குல வீடு கட்டுறதுக்கு 'பிளான் அப்ரூவல்' வாங்கியிருக்காங்களா; கார்ப்பரேஷன்ல இருந்து நோட்டீஸ் கொடுத்திருக்காங்களான்னு, கவுன்சிலருக்கு எதிர்கோஷ்டியை சேர்ந்த சில கவுன்சிலர்கள், 'டவுன் பிளானிங்' செக்சன்ல விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க,''

வீடு ஒதுக்கிட்டாங்க


''அதெல்லாம் இருக்கட்டும். சங்கனுார் பள்ளத்துல மூனு வீடு இடிஞ்சு விழுந்தவங்களுக்கு, மாற்று வீடு கொடுத்துட்டாங்க போலிருக்கே...''

''நீ வேற... கடுப்பேத்துற... வீடு அலாட்மென்ட் லெட்டர் கொடுத்துட்டாங்க. சித்தாபுதுார் குடியிருப்புல வசிக்கிறதுக்கு, ஒரு வீட்டுக்கு அஞ்சு லட்சம் ரூபா பயனாளிகள் பங்களிப்பு தொகை கட்டணும்னு சொல்லியிருக்கு; இப்போதைக்கு குடிபோகலாம்.

பணத்தை மெதுவா கட்டுங்கன்னு சொல்லியிருக்காங்க. வீட்டை இடிச்சது கார்ப்பரேஷன்; இலவசமா கொடுக்கறதை விட்டுட்டு, பணம் கட்டணும்னு 'செக்' வச்சிருக்காங்க. இதுல முக்கியமான ஆச்சரியம் என்னான்னா... பாதிக்கப்பட்டது ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க. அவுங்களுக்கே எந்த உதவியும் செய்யாம இருக்கறது, உடன்பிறப்புகளை வேதனை அடைய வச்சிருக்கு...''

ரத்தத்தின் ரத்தங்கள் விரக்தி


''எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா நடத்தாம, ரத்தத்தின் ரத்தங்கள் விட்டுட்டாங்களே; அந்தளவுக்கு இலைக்கட்சியில கோஷ்டி பிரச்னை தலைதுாக்கியிருக்குன்னு சொல்றாங்களே...''

''ஆமாப்பா... உண்மைதான்! சூலுார் யூனியன்ல மோப்பிரிபாளையம் பேரூராட்சியில எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை கொண்டாடலையாம். அந்த ஏரியாவுல ஒன்றியத்துக்கும், இன்னொரு நிர்வாகிக்கும் உரசல் இருக்குதாம். அதனால, இலைக்கட்சியில ரெண்டு கோஷ்டி இருக்குது. இவுங்களுக்குள்ள இருக்கற சண்டையில, கட்சியை துவக்குன எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையே கொண்டாடாம விட்டுட்டாங்களாம். 2026க்குள் இந்த ஏரியாவுல, கட்சியே காணாம போயிடுமோன்னு ரத்தத்தின் ரத்தங்கள், புலம்பிட்டு இருக்காங்க...''

''என்னக்கா... இப்படிச் சொல்றீங்க... நம்மூர்ல இருந்து இ.பி.எஸ்., நடைபயணத்தை துவக்கப் போறாருன்னு சொல்லியிருக்காங்க...''

''தி.மு.க., ஆட்சிக்கு எதிரா, நம்மூர்ல வ.உ.சி., மைதானத்துல இருந்து, முன்னாள் முதல்வர் ஜெ., பிரசாரத்தை துவக்குனாங்க. அந்த சமயத்துல மின்சாரப் பிரச்னைனால, எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருந்தாங்க. தன்னெழுச்சியா... ஆயிரக்கணக்கான ஜனங்க கலந்துக்கிட்டாங்க. ஏர்போர்ட்டுல இருந்து வ.உ.சி., மைதானம் வரைக்கும் மனித தலையாவே இருந்துச்சு.

அந்த மாதிரி, தி.மு.க., கவர்மென்ட்டை உலுக்குற மாதிரி, நம்மூர்ல இருந்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை துவக்கணும்னு, வேலுமணி விரும்புறாரு. அதனால, நடைபயண அறிவிப்பை வெளியிட்டிருக்காரு; ஆர்.எஸ்.புரம் ஏரியாவுல இ.பி.எஸ்., கொஞ்ச துாரம் நடைபயணமா போவாருன்னு சொல்றாங்க. ஜனங்கள்ட்ட வரவேற்பு கெடைக்குமான்னு தெரியலை,''

தாமரையில் பூசல்


''தாமரைக்கட்சியில உட்கட்சி பூசல் உச்சத்துல இருக்குதாமே...''

''ஆமாக்கா... அரசியல் கட்சின்னாலே... கோஷ்டிகள் இருக்கத்தானே செய்யும். ஆனா, தாமரைக்கட்சியில தொண்டர்களை காட்டிலும், தலைவர்களே ஜாஸ்தியா இருக்காங்க. எலக்சன்ல ஓட்டு வாங்கறதுல காட்டுற ஆர்வத்தை விட, கட்சியில பதவியை கைப்பத்துறதுக்கு ரொம்ப மெனக்கெடுறாங்க...''

''தெற்கு மாவட்டத்துக்கு நியமிச்சிருக்கிற, புதிய தலைவருக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கெளம்பியிருக்கு; ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி நாறடிச்சிருக்காங்க. இதே மாதிரி, வடக்கு மாவட்ட தலைவர் தேர்தல்லயும் குளறுபடி நடந்துருக்குன்னு, கட்சிக்காரங்க சொல்றாங்க.

பதவியை கைப்பத்துறதுக்கு பத்து பேர் விண்ணப்பிச்சாங்களாம். மூனு பேருக்கு படிவம் கொடுத்தாங்களாம்; அதுல, விண்ணப்பிக்காதவருக்கும் படிவம் கொடுத்திருக்காங்கன்னு புகைச்சல் ஓடிட்டு இருக்குது... கட்சி தலைமை தலையிடலைன்னா, உட்கட்சி பூசல் உச்சத்துக்கு போயி ஏழரையாகிடும்னு, தாமரைக்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க...''

சும்மா ஒரு மீட்டிங்


''அதெல்லாம் இருக்கட்டும். மத்திய வனத்துறை அமைச்சர் தலைமையில, நம்மூர்ல மீட்டிங் நடந்துச்சாமே... எதுக்கு வந்தாங்க... என்ன மீட்டிங்...''

''அதுவா... பார்லி., ஆலோசனை குழு கூட்டம் நம்மூர் பாரஸ்ட் காலேஜ் வளாகத்துல நடந்திருக்கு; வனம், சுற்றுச்சூழல் சம்பந்தமா ஏகப்பட்ட பிரச்னை இருக்குது; அதைப்பத்தி கவலைப்படாம, ஒரு மணி நேரம் மீட்டிங் மட்டும் நடத்திட்டு, போயிருக்காங்கன்னு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமர்சனம் செய்றாங்க.

மீட்டிங் முடிஞ்சதும், பாலக்காடு பக்கத்துல இருக்கற ஆயுர்வேத சென்டருக்கு முக்கியப் புள்ளி போயிருக்காரு. அவரும், மையத்தை நடத்துறவரும் நண்பர்களாம். இந்த சந்திப்புக்கு போறதுக்காகவே, நம்மூர்ல சம்பிரதாயத்துக்காக 'மீட்டிங்' நடத்தியிருக்காங்கன்னு, ஆர்வலர்கள் வேதனைப்படுறாங்க...''

இன்ஸ்.,களுக்குள் முட்டல்


''சிட்டியில இருக்கற இன்ஸ்.,களுக்கு இடையே முட்டல்... மோதல் அதிகமாயிட்டு இருக்குதாமே...''

''அதுவா... பஞ்சாயத்து பேசி, டீல் பேசி, பல கோடி சம்பாதிச்ச, ரூரல்ல டியூட்டி பார்த்த இன்ஸ்., ஒருத்தர் மேல, ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் போயிருக்கு; அவரை வேற ஊருக்கு மாத்துறதுக்கு யோசிச்சிருக்காங்க. அதை தெரிஞ்சுக்கிட்ட இன்ஸ்., தனக்கு நெருக்கமான ஆபீசர் மூலமா, நம்மூர்லயே வலுவான இடத்துல, 'போஸ்ட்டிங்' வாங்கி, உக்கார்ந்துட்டாரு.

அவரோட ஆட்டம் குறையலைன்னு, உளவுத்துறை 'ரிப்போர்ட்' போயிருக்கு. தென்மாவட்டங்களுக்கு துாக்கியடிக்க ஆலோசனை நடக்குதாம். நம்மூரை விட்டு போறதுக்கு மனசில்லாத இன்ஸ்., தனக்கு தெரிஞ்ச உயரதிகாரிங்க கிட்ட பேசி, 'ரிப்போர்ட்'டை மாத்துறதுக்கு முயற்சி செய்றாராம்...''

''இதே மாதிரி, சிட்டி லிமிட்டுல, கிலோ கணக்குல தங்கம் கேட்டு, கட்டப்பஞ்சாயத்து செஞ்சுக்கிட்டு இருக்கற, ரெண்டு ஸ்டேஷன் இன்ஸ்.,களுக்கும் இப்போ முட்டிக்கிச்சாம். இந்த விவகாரத்துல ரெண்டு பேரும் சேர்ந்து, 'டீலிங்' பேசுறாங்களாம். ஆனா, பிரச்னை வர்றப்போ, ஒருத்தரு பெயர் தான் வெளிச்சத்துக்கு வர்றதுனால, இன்னொரு இன்ஸ்., கடுப்புல இருக்காரு. ரெண்டு இன்ஸ்.,களுக்கு நடுவுல 'கோல்டு வார்' ஆரம்பிச்சிருக்குன்னு உளவுத்துறைக்காரங்க சொல்றாங்க...''

டீச்சர் கண்ணீர்


''நம்மூர்ல பள்ளிக் கல்வித்துறை செயல்பாடு, கொஞ்சம் கொஞ்சமா மோசமாகிட்டு வருதுன்னு சொல்றாங்களே... உண்மைதானா...''

''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். உண்மைதான்! அன்னுார் ஏரியாவுல எஜுகேஷன் டிபார்ட்மென்டுல இருக்கற ஒரு ஆபீசர், ஸ்கூல் கட்டமைப்பு சம்பந்தமா டீச்சர்ஸ் ஏதாச்சும் சொன்னா... வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறாராம்,''

''கொஞ்ச நாளைக்கு முன்னாடி... ஸ்கூலுக்கு என்னென்ன வசதி தேவைன்னு உயரதிகாரிக்கு ஒரு டீச்சர் லிஸ்ட் அனுப்பியிருக்காங்க. அதை கேள்விப்பட்ட ஆபீசர், சம்பந்தப்பட்ட டீச்சரை வரவழைச்சு, ஒரு மணி நேரம் நிக்க வச்சு, கேள்வியா கேட்டு நோகடிச்சிருக்காரு; அந்த டீச்சர் கண்ணீர் விட்டு கதறியிருக்காங்க. அந்த ஆபீசர், ஆண் ஆசிரியர்களிடம் இப்படி நடந்துக்கிறதில்லை. லேடி டீச்சர்களை மட்டும் 'டார்ச்சர்' பண்றாருன்னு, எஜுகேஷன் டிபார்ட்மென்ட்டுல விவாதம் போயிட்டு இருக்கு...'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

டேபிளில் இருந்த 'லேப்-டாப்'ஐ 'ஆன்' செய்து, செய்திக்கான தரவுகளை துழாவ ஆரம்பித்தாள் மித்ரா.






      Dinamalar
      Follow us