/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரேம்ப்' திட்டத்தில் பங்கேற்க இம்மாத இறுதி கடைசி தேதி
/
'ரேம்ப்' திட்டத்தில் பங்கேற்க இம்மாத இறுதி கடைசி தேதி
'ரேம்ப்' திட்டத்தில் பங்கேற்க இம்மாத இறுதி கடைசி தேதி
'ரேம்ப்' திட்டத்தில் பங்கேற்க இம்மாத இறுதி கடைசி தேதி
ADDED : அக் 23, 2025 12:24 AM
கோவை: ரேம்ப் திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் பெறுவதற்காக, உணவு பதனிடும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின், எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு 'ரேம்ப்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசின், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி கழகம்- அபெக்ஸ், மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிறுவனமான ஐ.ஐ.எம்.ஆர்., உடன் இணைந்து, உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இத்திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளது.
உணவு பதப்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பிராண்டிங், பேக்கேஜிங், சந்தைப்படுத்துதல், புதிய பொருட்களை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பங்கேற்க 'உத்யம்' பதிவு பெற்ற, ரூ.5 லட்சத்துக்கும் மேல் வருவாய் கொண்ட உணவு பதனிடல் துறையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இறுதி தேதி, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 95664 66471, 95002 61727 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.