/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விழும்போது மீண்டும் எழாதவனே தோற்றவன்'
/
'விழும்போது மீண்டும் எழாதவனே தோற்றவன்'
ADDED : மார் 29, 2025 05:57 AM

தைரோகேர் நிறுவனர் வேலுமணி பேசியதாவது:
கல்வி என்பதே நமக்கான ஆயுதம். அதை சரியாக பயன்படுத்துபவன் வாழ்வின் வெற்றியாளராக திகழ்கின்றான். 'தினமலர்' போன்று வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை.
சூழல்கள் எதுவாயினும், விழுபவன் வாழ்வில் தோற்பது இல்லை; மீண்டும் எழாதவனே தோற்றவனாக கருதப்படுவான். வாழ்க்கையில் அமைதி மிகவும் முக்கியம்; அமைதியுள்ளவர்களே மகிழ்ச்சியாக இருக்க முடியும். மகிழ்ச்சி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். வெற்றி பெற்றால் தான் செல்வம் சேரும்.
ஏழை வீட்டில் பிறந்ததற்கு நான் பெருமைபடுகிறேன். நம் குடும்ப சூழல்கள் நம் பயணத்தில் ஒரு போதும் தடையாக கருதாமல், கல்வியின் துணையுடன் தொடர்ந்து முன்னேறவேண்டும்.
எந்த துறையாக இருந்தாலும், தேவை அதிகமாகவும், வினியோகம் குறைவாகும் உள்ள இடத்தில் தொழில் வாய்ப்புக்கள் இருக்கும். அதை எங்கு என புரிந்து, 'ரிஸ்க்' எடுத்து உழைக்கவேண்டும். சரியான முடிவு என்பது இல்லை; முடிவை எடுத்து அதை சரியானதாக மாற்றும் திறமை உங்களிடம் இருக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.