/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது; இனி, சரணம் ஐயப்பா கோஷம் முழங்கும்
/
கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது; இனி, சரணம் ஐயப்பா கோஷம் முழங்கும்
கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது; இனி, சரணம் ஐயப்பா கோஷம் முழங்கும்
கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது; இனி, சரணம் ஐயப்பா கோஷம் முழங்கும்
ADDED : நவ 14, 2024 11:18 PM

கோவை ; கார்த்திகை மாதம் நாளை (சனிக்கிழமை) பிறப்பதால் ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து மண்டல விரதத்தை துவக்குகின்றனர்.சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமியை தரிசிக்க கார்த்திகை, மார்கழி இவ்விரண்டு மாதங்களில் திரளான பக்தர்கள் வழிபாட்டுக்கு செல்கின்றனர். தை மாதத்தின் முதல் வாரத்துடன் மண்டல காலம் நிறைவாகும்.
மண்டல காலங்களில் மாலை அணிந்து விரதமிருந்து, அன்றாடம் இரு வேளை நீராடி சரண கோஷங்களை பாராயணம் செய்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி ஏந்தி 18 படிகளை கடந்து ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வர்.
அதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து சுவாமியை வழிபட்டு மண்டல விரதத்தை துவக்குவர்.
அதன் படி கோவை சித்தா புதுாரிலுள்ள ஐயப்பசுவாமி கோவிலில் நாளை கார்த்திகை மாத திறப்பை ஒட்டி மண்டல வழிபாடுகள் துவங்குகிறது.
நாளை காலை (சனிக்கிழமை) 4:00 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் தந்திரீக ஆச்சார்யர்களை கொண்டு லட்சார்ச்சனை மஹாயக்ஞம் நடக்கிறது.
இதில் காரிசித்திக்கான சிறப்பு சூக்த அர்ச்சனைகளும், சனிதோஷ சாந்தி ஜெபமும் நடக்கிறது.
தொடர்ந்து களபாபிஷேகமும், அகன்ட நாம பஜனையும், மஹா அன்னதானமும், மண்டலவிளக்கு பூஜையும் நடக்கிறது.
மண்டல விரத காலங்களில் குருவாயூர் கிருஷ்ணனின் பக்தி கான கச்சேரிகளும் நடைபெறும். மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஐய்யப்ப சேவா சங்கம் செய்துள்ளது.
மகர ஜோதி நாளில் மங்கள வாத்தியங்களுடன் காட்சி சீவேலியும் மாலையில் மஹாதீபாராதனையும் முத்தாயம் பகையும் நடைபெறுகிறது.
இதே போன்று ராமநாதபுரம், வடகோவை, சாய்பாபாகாலனி மற்றும் கோவைப்புதுாரிலுள்ள ஐயப்பன்கோவில், ஒலம்பஸ் ஆர்ய வைத்திய பார்மசி வளாகத்திலுள்ள தன்வந்திரி கோவில், மதுக்கரை லட்சுமிநாராயணர் கோவிலில் மாலை அணியும் வைபவமும் மண்டல விரதம் துவங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.