/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி 'பட்ஜெட்' கூட்டம்
/
வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி 'பட்ஜெட்' கூட்டம்
வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி 'பட்ஜெட்' கூட்டம்
வரும் 8ம் தேதி நடக்கிறது மாநகராட்சி 'பட்ஜெட்' கூட்டம்
ADDED : மார் 05, 2024 01:03 AM
கோவை;மாநகராட்சியில் நடப்பு, 2024-25ம் நிதியாண்டுக்கான 'பட்ஜெட்' கூட்டம் வரும், 8ம் தேதி நடக்கிறது.
கோவை மாநகராட்சியில் கடந்த, 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மொத்த வரவு தொகை, 3,018.90 கோடி ரூபாய்; மொத்த செலவு, 3,029.07 கோடி ரூபாய் எனவும், நிகர பற்றாக்குறை, 10.17 கோடி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டு தோறும் மார்ச் இறுதியில் பட்ஜெட் கூட்டம் நடத்தப்படும். லோக்சபா தேர்தல் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்பதால், முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு தயாரிப்பு பணிகளும் வேகப்படுத்தப்பட்டன.
கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், சில திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. கடந்த மாதம் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, துறை வாரியாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. 'பட்ஜெட்' தயாரிப்பு பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வரும், 8ம் தேதி கூட்டத்தில் தாக்கல் செய்ய, மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக, மேயர் கல்பனா தெரிவித்தார்.

