/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய மேல்நிலை தொட்டி பயன்பாட்டுக்கு வந்தாச்சு!
/
புதிய மேல்நிலை தொட்டி பயன்பாட்டுக்கு வந்தாச்சு!
ADDED : செப் 23, 2024 10:45 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சட்டக்கல்புதூரில் புதிய மேல்நிலைதொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி, சட்டக்கல்புதூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு இருந்த மேல்நிலைதொட்டி சேதமடைந்திருந்தது.
இங்கு புதிதாக மேல்நிலைத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலைதொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. திறப்பு விழாவில், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், சொக்கனூர் ஊராட்சித்தலைவர் திருநாவுக்கரசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.