/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து நடக்கும் 'பிளாக் ஸ்பாட்' எண்ணிக்கை 72 ஆக உயர்வு! ஐந்தே ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்தது

ADDED : ஆக 20, 2025 12:59 AM

கோவை; விபத்துகள் நடக்கும் பிளாக் ஸ்பாட்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. அதை குறைக்க போலீஸ் தரப்பில், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து போலீசார் முக்கிய இடங்களில், வாகன தணிக்கை செய்கின்றனர். இருப்பினும் விபத்துகள் குறைந்தபாடில்லை.
2020ம் ஆண்டு விபத்து நடக்கும் இடங்கள் குறித்து போக்குவரத்து போலீஸ் ஆய்வு செய்தனர். அப்போது, 15 இடங்கள் (பிளாக் ஸ்பாட்) அடையாளம் காணப்பட்டன. ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை, 72 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:
நகரில் 500மீ. தூரத்துக்குள் அடிக்கடி விபத்து நடப்பது, ஒரே இடத்தில் அதிக விபத்து நடப்பது ஆகியவற்றின் அடிப்படை யில், 'பிளாக் ஸ்பாட்' தீர்மானிக்கிறோம்.
இப்போது கண்டறிந்த 72 பிளாக் ஸ்பாட்களில் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பலகையும், தரையில் விபத்து எச்சரிக்கை பதிவும் இருக்கும்.
பிளாக் ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பது, விதிமீறலுக்கு உடனே வழக்கு பதிந்து அபராதம் விதித்தல், 'நோ ஹெல்மெட், நோ என்ட்ரி' திட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, விபத்துகள் குறைந்துள்ளன.
விதிமீறல்
அபராதம் 6 கோடி
மாநகரில் கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, 683 விபத்துகள் நடந்தன; 175 பேர் உயிர் இழந்த னர். 539 பேர் காயம் அடைந்தனர். இந்த ஆண்டில் இதுவரை 601 விபத்துகள் நடந்துள்ளன. 176 பேர் பலியாகி உள்ளனர். 644 பேர் காயம் அடைந்தனர். விதிமீறியதாக 2.51 லட்சம் வழக்குகள் பதிவாகி ன. ரூ.6 கோடி அபராத ம் விதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான கார ணங்களில் பராமரிக்கப்படாத சாலைகள் என்பது இடம்பெறவில்லை.