UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:07 PM

வால்பாறை: ஆழியாறு அருகே, அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றையானையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
வால்பாறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு அட்டகட்டி வழியாக பொள்ளாச்சிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. பஸ்சானது, ஆழியாறு சோதனை சாவடி அருகே சென்ற போது, ஒற்றை யானை பஸ்சை வழிமறித்தது.
இதனையடுத்து, டிரைவர் பஸ்சை பின்நோக்கி நகர்த்தினார். சிறிது நேரம் ரோட்டில் அங்கும், இங்குமாக சென்ற யானை, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து, வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
வனத்துறையினர் கூறுகையில், ‘ஆழியாறு ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் உலா வருகின்றன. இது போன்ற சூழ்நிலையில் சுற்றுலா பயணியர், வாகனங்களில் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும்.
வழித்தடத்தில் யானைகள் தென்பட்டால், எந்த சூழ்நிலையிலும் தொந்தரவு செய்யக்கூடாது. மீறினால் வன உரியின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
