/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்டறிய அ.தி.மு.க.,வுக்கு உத்தரவு வாக்காளர்களுக்கு என்ன பிரச்னை?தேர்தல் பணியில் துவங்கியது 'சுறுசுறு'
/
கேட்டறிய அ.தி.மு.க.,வுக்கு உத்தரவு வாக்காளர்களுக்கு என்ன பிரச்னை?தேர்தல் பணியில் துவங்கியது 'சுறுசுறு'
கேட்டறிய அ.தி.மு.க.,வுக்கு உத்தரவு வாக்காளர்களுக்கு என்ன பிரச்னை?தேர்தல் பணியில் துவங்கியது 'சுறுசுறு'
கேட்டறிய அ.தி.மு.க.,வுக்கு உத்தரவு வாக்காளர்களுக்கு என்ன பிரச்னை?தேர்தல் பணியில் துவங்கியது 'சுறுசுறு'
UPDATED : ஜன 31, 2024 01:48 AM
ADDED : ஜன 31, 2024 12:36 AM

கோவை:லோக்சபா தேர்தல் பணியை துவக்கும் வகையில், கோவை அ.தி.மு.க.,வில் அமைத்துள்ள பூத் கமிட்டிகள் சார்பில், 'வாட்ஸ் அப்' குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, பட்டியல் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
கோவை மாவட்டத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாவட்ட அளவில், 10 சட்டசபை தொகுதிகளில், 3,077 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன.
இப்பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஒவ்வொரு கட்சியும் பூத் கமிட்டிகள் அமைத்துள்ளன. கோவை ஒருங்கிணைந்த அ.தி.மு.க., சார்பில் அமைத்துள்ள ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் ஒரு தலைவர், 6 உறுப்பினர்கள், மகளிரணி - 5 பேர், இளைஞர் - இளம்பெண் பாசறை (ஆண்-3, பெண்-2) - 5 பேர், தகவல் தொழில்நுட்ப பிரிவு - 2 பேர் என, 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒவ்வொரு பூத் கமிட்டி சார்பிலும் 'வாட்ஸ் அப்' குழு உருவாக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
இறுதி பட்டியலில் உள்ள வாக்காளர்களை பூத் வாரியாக பிரித்து, அந்தந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்தந்த பூத் வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களது மொபைல் போன் எண்களை பெற்று, புதிதாக 'வாட்ஸ் அப்' குழு உருவாக்கும் பணி நடந்து வருகிறது.
குடிநீர் வரவில்லை; மின் சப்ளை இல்லை; ரோடு மோசமாக இருக்கிறது; தெரு நாய் தொந்தரவு உள்ளிட்ட வாக்காளர்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் எத்தகைய பதிவு வேண்டுமானாலும் போடலாம்; அதை கண்டிக்கக் கூடாது; அ.தி.மு.க.,வை விமர்சித்து பதிவு போட்டாலும், கோபப்படக்கூடாது. சுமூகமாக பேசி, அவர்களின் தேவையை கேட்டறிந்து, தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் தேதி அறிவித்ததும், வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்திப்பதற்கு உதவும். பூத் கமிட்டியில் உள்ள ஒவ்வொருவரும் தலா, 50 பேரை சந்திக்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.