/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நிழற்கூரை: சுண்டக்கம்பாளையத்தில் வேதனை
/
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நிழற்கூரை: சுண்டக்கம்பாளையத்தில் வேதனை
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நிழற்கூரை: சுண்டக்கம்பாளையத்தில் வேதனை
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நிழற்கூரை: சுண்டக்கம்பாளையத்தில் வேதனை
ADDED : நவ 18, 2025 03:35 AM

உடுமலை: திறந்தவெளி 'பார்' ஆகவும், சமூகவிரோத மையமாகவும், பஸ் ஸ்டாப் நிழற்கூரை மாறியுள்ளதால், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளதாக சுண்டக்கம்பாளையம் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடுமலை ஒன்றியம், போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் சுண்டக்கம்பாளையம். கிராமத்தில், 1,500க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பிரதான ரோட்டில் இருந்து கிராம வீதி செல்லும் பகுதியில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைந்துள்ளது.
இந்த நிழற்கூரை அருகில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு, மோசமான நிலையில் உள்ளது. அனைத்து நேரங்களிலும், நிழற்கூரையை 'குடி'மகன்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர்; காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி உடைக்கின்றனர்.
மேலும், அவ்வழியாக செல்பவர்களிடம், அத்துமீறலிலும் சில சமயங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், பெண்கள், குழந்தைகள் அவ்வழியாக செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. அருகிலேயே அரசுப்பள்ளியும் உள்ளதால், மாணவர்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.
உடுமலை போலீசார், ரோந்து வந்து இந்த அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மோசமான நிலையிலுள்ள நிழற்கூரையை, உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் புதுப்பிக்க வேண்டும் என, சுண்டக்கம்பாளையம் கிராம மக்கள் திருப்பூர் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

