/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவில் நிரம்பி வழிகிறது கார்கள்: நிறுத்துமிடம் கூடுதல் இடம் தேடுகிறது மாநகராட்சி
/
செம்மொழி பூங்காவில் நிரம்பி வழிகிறது கார்கள்: நிறுத்துமிடம் கூடுதல் இடம் தேடுகிறது மாநகராட்சி
செம்மொழி பூங்காவில் நிரம்பி வழிகிறது கார்கள்: நிறுத்துமிடம் கூடுதல் இடம் தேடுகிறது மாநகராட்சி
செம்மொழி பூங்காவில் நிரம்பி வழிகிறது கார்கள்: நிறுத்துமிடம் கூடுதல் இடம் தேடுகிறது மாநகராட்சி
UPDATED : டிச 24, 2025 07:13 AM
ADDED : டிச 24, 2025 05:07 AM

காந்திபுரம்: செம்மொழி பூங்காவை பார்க்க கூட்டம் திரள்வதால், வாகன நிறுத்துமிடம் நிரம்பி வழிகிறது.
ஒரே நேரத்தில் 453 கார், 1,048 டூவீலர் நிறுத்தலாம். விடுமுறை நாட்களில் அதிகமான வாகனங்கள் வருகின்றன. ஒரே நேரத்தில் வருவதில்லை என்பதால், பார்க்கிங் ஊழியர்களுக்கு சிரமம் இல்லை.
கடந்த சனிக்கிழமை 13,584 பேரும், ஞாயிறு 24,166 பேரும் பூங்காவுக்கு வந்தனர். 11 நாட்களில் 1.25 லட்சம் மக்கள் வந்திருக்கின்றனர்.
சுற்றிப்பார்க்க 2 மணி நேரமாகிறது. மாலையாகி விட்டால் மின்னொளியில் பார்த்து திரும்ப கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கின்றனர். திறந்தவெளி அரங்கில் நிகழ்ச்சி பார்க்க 1,500 பேர் அமர்கின்றனர்.
இதன் காரணமாக, வாகன நிறுத்துமிடம் எப்போதும் நிரம்பியே காணப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு காருக்கு 10 ரூபாய், டூவீலருக்கு 5 ரூபாய், பஸ் என்றால் 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் காந்திபுரம் மேம்பாலத்தின் ஒரு பாதையில் கார்களை நிறுத்தி விட்டு, பூங்காவுக்கு சென்று விட்டனர். அதை போலீஸ் தடுக்காமல் விட்டதால், பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
நஞ்சப்பா ரோட்டில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது; நிறுத்தினால் 1,000 ரூபாய் அபராதம் என்கிற எச்சரிக்கை பலகையை, பூங்கா முன் நேற்று போலீசார் வைத்தனர். மீறி நிறுத்தியவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.
வாகனங்கள் நிறுத்த கூடுதல் இடம் பிடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ''மத்திய சிறை பழைய நுழைவாயில் பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அந்த இடத்தை கேட்டிருக்கிறோம். குண்டுவெடிப்பு வழக்கு கோர்ட் செயல்படும் வளாகத்தின் பின்புறம் ஒரு ஏக்கர் இடம் இருக்கிறது. அதையும் கேட்டுள்ளோம்” என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நமது நிருபரிடம் தெரிவித்தார்.
பூங்காவுக்கு 10 நாளில் வந்த

