/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருவேப்பிலைக்கு வந்த மவுசு கிலோ ரூ.100ஐ நெருங்குகிறது
/
கருவேப்பிலைக்கு வந்த மவுசு கிலோ ரூ.100ஐ நெருங்குகிறது
கருவேப்பிலைக்கு வந்த மவுசு கிலோ ரூ.100ஐ நெருங்குகிறது
கருவேப்பிலைக்கு வந்த மவுசு கிலோ ரூ.100ஐ நெருங்குகிறது
ADDED : டிச 28, 2025 05:13 AM

காரமடை, பனியால் கருவேப்பிலை மகசூல் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.90க்கு விற்கிறது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கன்னார்பாளையம், குருந்தமலை, தேரம்பாளையம், காளட்டியூர், பெள்ளாதி, பள்ளேபாளையம், மருதூர், கோடதாசனூர், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் கருவேப்பிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
செங்காம்பு ரகம் கருவேப்பிலை மிகுந்த மணமும், மருத்துவ குணமும் உள்ளதாக கருதப்படுவதால் இப்பகுதி விவசாயிகள், செங்காம்பு ரக கருவேப்பிலையை அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர். இங்கிருந்து கருவேப்பிலை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்கிறது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பனிக்காலம் என்பதால் இப்போது கருவேப்பிலை மகசூல் குறைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. விவசாயிகள் கூறுகையில், 'கருவேப்பிலை செடிகள் கோடை காலத்தில் செழித்து வளரும்.
பனிக்காலத்தில் வளராது. போன வாரம் கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை ஆனது. கடந்த வாரம் ரூ.80க்கு போனது.
'நேற்று கிலோ ரூ.90க்கு விற்றது. நூறை தொட்டாலும் ஆச்சரியம் இல்லை' என்றனர்.

