ADDED : செப் 08, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
உப்பிலிபாளையம்: உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கூடாது என, ஊர் பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
மனுவில், ‘உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், 2019ல் இருந்து தலைமை ஆசிரியராக உள்ள கருணாகரனை வேறு பள்ளிக்கு மாற்றுவதாக தெரிகிறது. பள்ளி வளர்ச்சி, மாணவர் நலனை கருத்தில் கொண்டு, அவர் இதே பள்ளியில் தொடர அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
