sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழில் பூங்கா அமைவதால் ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி

/

தொழில் பூங்கா அமைவதால் ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி

தொழில் பூங்கா அமைவதால் ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி

தொழில் பூங்கா அமைவதால் ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி


ADDED : ஆக 29, 2024 02:13 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: வறண்டு போயுள்ள அன்னுார் வடக்கு ஒன்றியத்தில், தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளை ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் வரவேற்றுள்ளனர்.

அன்னுார் ஒன்றியத்தில், 115 ஸ்பின்னிங் மில்கள், 40 ஜின்னிங் பேக்டரிகள் உள்ளன. இத்துடன் பவுண்டரிகள், ஸ்டீல் ரோலிங் மில்கள், விசைத்தறிகள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் என 400 நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வெளிமாவட்டம் மற்றும் ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த 20,000 தொழிலாளர்கள் அன்னுார் வட்டாரத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

பத்திர பதிவுக்கு தடை


இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, அன்னுார் மற்றும் ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிட்கோ) அறிவித்த தொழில் பூங்கா அமைந்துள்ள பகுதியில் பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொழில் பூங்கா நடவடிக்கை துவங்கியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் கூறியதாவது:

அன்னுார் வட்டாரத்தில், மொத்தமுள்ள 115 நூற்பாலைகளில் 10 நூற்பாலைகள் மட்டுமே வடக்கு ஒன்றியத்தில் உள்ளன. 105 நூற்பாலைகள் தெற்கு ஒன்றியத்தில் அமைந்துள்ளன. ஸ்டீல் ரோலிங் மில், பவுண்டரி, இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் என 90 சதவீதம் அன்னுாரின் தெற்கு பகுதியில் தான் அமைந்துள்ளது. அன்னுாரின் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், கோவைக்கும், திருப்பூருக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

வேலைவாய்ப்பு கிடைக்கும்


தெற்கு ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 30 முதல் 40 'லே அவுட்'டுகள் புதிதாக அமைக்கப்பட்டு குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல நூறு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

ஆனால் வடக்கு ஒன்றியத்தில் ஒரு ஊராட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு இடத்தில் மட்டும் லேஅவுட் அமைக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. வடக்கு ஒன்றியத்தில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டால் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும், தொழில் பெருகும். தொழிற்சாலைகள் சார்ந்த பிற தொழில்கள் வளர்ச்சி அடையும், பணப்புழக்கம் ஏற்படும்.

எனவே, தற்போது தொழில் பூங்கா நடவடிக்கை துவங்கி உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எனினும் நிறுவனங்கள் வைத்துள்ள நிலங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாங்களாக விரும்பி தரும் நிலங்களில் மட்டும் தொழில் பூங்கா அமைக்க வேண்டும்.

விவசாயிகள் அல்லது பொதுமக்களிடம் நிலத்தை கையகப்படுத்தாமல், தொழில் பூங்கா அமைத்தால், அன்னுார் தெற்கு ஒன்றியம் போல், அன்னுார் வடக்கு ஒன்றியமும் தொழில் வளர்ச்சி பெற்ற பகுதியாக மாறும். பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிதாக லே--அவுட்டுகள் அமைக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us