/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி திருநாள் வழிபாட்டுக்காக அகல் விளக்குகள் விற்பனை அதிகம்
/
தீபாவளி திருநாள் வழிபாட்டுக்காக அகல் விளக்குகள் விற்பனை அதிகம்
தீபாவளி திருநாள் வழிபாட்டுக்காக அகல் விளக்குகள் விற்பனை அதிகம்
தீபாவளி திருநாள் வழிபாட்டுக்காக அகல் விளக்குகள் விற்பனை அதிகம்
ADDED : அக் 30, 2024 11:58 PM
கோவை; தீபாவளி பண்டிகைக்காக, பூமார்க்கெட், டி.கே.மார்க்கெட், டவுன்ஹால் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.
தீபாவளிக்கு புத்தாடைகளை அணிந்தும், இனிப்புகளை பரிமாறியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். அதோடு பலர் தங்கள் வீடுகளில் வரிசையாக விளக்கேற்றி பண்டிகையை கொண்டாடுவர்.
தீபாவளி கொண்டாட்டத்திற்காக கோவை டி.கே.மார்க்கெட், பூமார்க்கெட், டவுன்ஹால் பகுதிகளில் விதவிதமான வடிவங்களில் கலர், கலரான மண் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. விற்பனையும் அமோகமாக நடந்தது.
மண் அகல் விளக்குகள், ஐந்துமுகங்களை கொண்டும், ஒரு முகங்களை கொண்டும் இருந்தது. அதில் பல்வேறு வர்ணங்கள் தீட்டப்பட்டு, அழகுற காட்சியளித்தது. அதில் இரட்டை மாடல் அகல்விளக்குகளும் இருந்தன. இவை ஒவ்வொன்றும், 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது.
கேதார கவுரி விரதத்தை தொடருபவர்கள், மஹாலட்சுமியை வழிபாடு செய்பவர்கள், முன்னோர்களை தொழுது தீபாவளியை கொண்டாடுபவர்கள், மண்விளக்குகளை வாங்கி சென்றனர்.
விளக்குகளோடு வாழைக்கான்று, தோரணங்கள், மாவிலை, எண்ணெய், நெய், திரி, பாக்குமட்டை, தேக்குஇலை போன்றவற்றை ஆர்வத்துடன் பெண்கள் வாங்கிச்சென்றனர்.