/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை கேள்விக்குறியானது பாதுகாப்பு
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை கேள்விக்குறியானது பாதுகாப்பு
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை கேள்விக்குறியானது பாதுகாப்பு
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை கேள்விக்குறியானது பாதுகாப்பு
ADDED : டிச 27, 2025 07:25 AM
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி ரோப்வே முதல்பிரிவு. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 14 மாணவர்கள் படிக்கின்றனர்.இந்த பள்ளி வளாகத்தை சுற்றிலும், மாணவர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான அழகு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் இந்தப்பள்ளி வாக்குச்சாவடியாக செயல்படுகிறது.
குடியிருப்பு பகுதியின் மத்தியில் பள்ளி அமைந்திருந்தாலும், அடிக்கடி எஸ்டேட் பகுதிக்கு யானைகள் வந்து செல்வதால், பள்ளி சத்துணவு கூடத்தையும் அடிக்கடி சேதப்படுத்துகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'பழமையான இந்தப்பள்ளி தற்போது புதுப்பிக்கப்பட்டு, மிக அழகாக காட்சியளிக்கிறது. ஆனால், பள்ளியை சுற்றிலும் தடுப்புச்சுவர் இல்லாததால், பள்ளிக்கு பகல், இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எனவே, வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிக்கு தடுப்புச்சுவர் கட்டித்தர கல்வி அதிகாரிகளும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

