/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சாஸ்திரங்கள் நல்ல கருத்துக்களையே போதிக்கின்றன': ராமகிருஷ்ணானந்தா பேச்சு
/
'சாஸ்திரங்கள் நல்ல கருத்துக்களையே போதிக்கின்றன': ராமகிருஷ்ணானந்தா பேச்சு
'சாஸ்திரங்கள் நல்ல கருத்துக்களையே போதிக்கின்றன': ராமகிருஷ்ணானந்தா பேச்சு
'சாஸ்திரங்கள் நல்ல கருத்துக்களையே போதிக்கின்றன': ராமகிருஷ்ணானந்தா பேச்சு
UPDATED : ஏப் 24, 2025 11:54 PM
ADDED : ஏப் 24, 2025 11:10 PM

பெ.நா.பாளையம்; சாஸ்திரங்கள் நல்ல கருத்துக்களையும், நேர்மறையான எண்ணங்களையும் நமக்கு போதிக்கின்றன என, நாகப்பட்டினம் சின்மயா மிஷன் சொற்பொழிவாளர் சுவாமி ராமகிருஷ்ணானந்தா பேசினார்.
துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள சின்மயா கிருபாவில், 'மனு ஸ்மிருதி மற்றும் திருக்குறள்' என்ற தலைப்பில் சுவாமி ராமகிருஷ்ணானந்தா பேசியதாவது;
'மனு ஸ்மிருதி நேர்மறையான எண்ணங்களை மனிதனுக்கு அளிக்கிறது. தூய்மையான மனிதர்களால், சாஸ்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. சாஸ்திரங்கள் தவறை போதிப்பது இல்லை. அதை புரிந்து கொள்ளும் நபர்களால்தான், தவறாக பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
உலக பொதுமறையான திருக்குறளும், மனு ஸ்மிருதியும் நெருங்கிய தொடர்புடையன. இரண்டுமே மனிதன் எவ்வாறு அறத்துடன் வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது.மனு ஸ்மிருதியில், வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்குமான விதி சரியாக வகுக்கப்பட்டுள்ளது. உணவு உண்ண, குளிக்க, சாப்பிட என, எல்லாவற்றுக்கும் விதியை வகுத்திருக்கிறது. இது தவிர, அரச தர்மம், சாட்சிகளை விசாரிக்க வேண்டிய தர்மம், தீர்ப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய தர்மம், தம்பதிகளுக்கான தர்மம், ஆபத்து காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய தர்மம், பிராயச்சித்தம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தர்மம், ஜாதி தர்மம், குல தர்மம், தேச தர்மம் என, பல்வேறு தர்மங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த சாஸ்திரங்களை, நாம், நம் வசதிக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடாது,' இவ்வாறு அவர் பேசினார்.
இச்சொற்பொழிவு இம்மாதம், 27ம் தேதி வரை தினசரி காலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை நடக்கிறது.

