/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என் இளமையின் ரகசியம் மகிழ்ச்சிதான்: நடிகர் விக்ரம்
/
என் இளமையின் ரகசியம் மகிழ்ச்சிதான்: நடிகர் விக்ரம்
என் இளமையின் ரகசியம் மகிழ்ச்சிதான்: நடிகர் விக்ரம்
என் இளமையின் ரகசியம் மகிழ்ச்சிதான்: நடிகர் விக்ரம்
ADDED : மார் 27, 2025 12:19 AM

கோவை: நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் நடித்த, 'வீர தீர சூரன்' படம் இன்று ரிலீசாகிறது.
இந்த படத்தின் அறிமுக விழா, கோவை புரோசன் மாலில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகை துஷாரா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் நடிகர் விக்ரம் பேசியதாவது: எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில்தான் விருப்பம் அதிகம். தொடர்ந்து அப்படியே நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். அதனால் இடை இடையே 'தில்', 'துாள்' போன்ற ஆக் ஷன் படங்களிலும் நடிப்பது வழக்கம். தங்கலானுக்கு பிறகு இந்த படம் வெளி வருகிறது. கண்டிப்பாக என் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
என் இளமையின் ரகசியம் என்னவென்று, ரசிகர்கள் கேட்கின்றனர். அது வேறு ஒன்றுமில்லை. நான் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். நடிகர்களுக்கு உடம்புதான் முக்கியம். அதை கவனிப்பதுதான் என் முதல் வேலை.
இந்த படத்தில், நடிகை துஷாரா கலைவாணி என்ற பாத்திரத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் ஆகியோரும், மிக சிறப்பாக நடித்து உள்ளனர். கண்டிப்பாக இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.