/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை சாகுபடி குறித்து கருத்தரங்கம் நாளை நடக்குது
/
தென்னை சாகுபடி குறித்து கருத்தரங்கம் நாளை நடக்குது
தென்னை சாகுபடி குறித்து கருத்தரங்கம் நாளை நடக்குது
தென்னை சாகுபடி குறித்து கருத்தரங்கம் நாளை நடக்குது
ADDED : பிப் 19, 2025 09:37 PM
ஆனைமலை; ஆனைமலையில், தென்னை சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நாளை நடக்கிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னையில், சாறு வடிதல், வெள்ளை ஈ, வேர் வாடல், குருத்து கட்டை உள்ளிட்ட நோய் தாக்குதல் அதிகமுள்ளது. இதனால், விவசாயிகள் செய்வதறியாது திணறுகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு கருத்தரங்கம், நாளை (21ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (22ம் தேதி) என இரண்டு கட்டமாக நடக்கிறது.
ஆனைமலை எஸ்.ஏ., மஹாலில் நடைபெறும் கருத்தரங்கில், வேர் வாடல் நோய், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து பேராசிரியர்கள், அனைத்து துறை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பேச உள்ளனர்.
மாவட்ட கலெக்டர், தோட்டக்கலை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று அறிவுரைகள் வழங்க உள்ளனர். இதில், விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும், என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.

