/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை குழாய் பதித்த இடத்தில் மழைக்கு தாங்காமல் கீழிறங்கிய மண்
/
பாதாள சாக்கடை குழாய் பதித்த இடத்தில் மழைக்கு தாங்காமல் கீழிறங்கிய மண்
பாதாள சாக்கடை குழாய் பதித்த இடத்தில் மழைக்கு தாங்காமல் கீழிறங்கிய மண்
பாதாள சாக்கடை குழாய் பதித்த இடத்தில் மழைக்கு தாங்காமல் கீழிறங்கிய மண்
ADDED : மே 20, 2025 12:10 AM

கோவை; கோவை மாநகராட்சி, 40வது வார்டு, லிங்கனுார் சித்தி விநாயகர் காலனியில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய குழியில், மழைக்கு மண் இறங்கியதால், அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
கோவை மாநகராட்சி, 40வது வார்டு, வடவள்ளி அருகே லிங்கனுார் சித்தி விநாயகர் காலனியில் உள்ள அனைத்து வீதிகளிலும் புதிதாக பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குழாய் பதித்து, 'மேனுவல் சேம்பர்' கட்டிய பிறகு, குழி தோண்டிய மண்ணைக் கொண்டு மூடி விட்டுச் சென்றனர்.
தண்ணீர் ஊற்றி, மண்ணை குழிக்குள் இறங்கச் செய்து, நன்கு இறுகும் வரை, மண்ணை கொட்டாமல், மேேலாட்டமாக கொட்டி விட்டுச் சென்று விட்டனர். மண் இறுகியதும், 'பேட்ச் ஒர்க்' செய்திருக்க வேண்டும்; அவ்வாறும் செய்யவில்லை.
நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ரோட்டில் தண்ணீர் ஆறு போல் ஓடியது. பாதாள சாக்கடைக்கு குழாய் பதித்த வீதிகளில் தண்ணீர் ஓடி, மண் இறங்கியதால், ரோட்டில் விரிசல் ஏற்பட்டது.
குழி மூடப்பட்ட இடத்தில், ரோடு அரிப்பு ஏற்பட்டது. அதனால், அப்பகுதியை சேர்ந்தவர்கள், வீட்டில் இருந்து வாகனங்களில் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
குழிக்குள் கார்கள் சிக்கியதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இரு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை உருவானது.
இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அலுவலர்கள் அனுப்பப்பட்டு, குழாய் பதித்த இடங்களில் ரோடு பெயர்ந்து காணப்பட்ட வீதிகளில், கடப்பாரையால் மண்ணை குத்தி விட்டு, 'வெட் மிக்ஸ்' கலவை பரப்பும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

