/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கைப்பந்து போட்டி வரும் 21ல் நடக்கிறது
/
மாநில கைப்பந்து போட்டி வரும் 21ல் நடக்கிறது
ADDED : டிச 18, 2024 08:05 PM
வால்பாறை; வால்பாறையில் சுவாமி விவேகானந்தர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சேடல்டேம் நண்பர்கள் சார்பில், மூன்றாம் ஆண்டு கைப்பந்து போட்டி வரும், 21ம் தேதி நடக்கிறது.
மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய், இரண்டாவதுபரிசாக, 10 ஆயிரம் ரூபாய், மூன்றாவது பரிசாக, 5 ஆயிரம் ரூபாய், நான்காவது பரிசாக, 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, பா.ஜ., கோவை தெற்கு மாட்ட தலைவர் வசந்தராஜன், பா.ஜ., மண்டல் தலைவர் பாலாஜி, பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

