/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுக்ரவாரப் பேட்டை பிறப்பெடுத்த கதை
/
சுக்ரவாரப் பேட்டை பிறப்பெடுத்த கதை
ADDED : நவ 25, 2025 05:23 AM
கோ வை நகரின் நடுப்பகுதியை இன்று பலர், 'சுக்ரார் பேட்' என்று அழைக்கிறார்கள். ஆனால், அதன் உண்மையான பெயர் 'சுக்ரவாரப் பேட்டை'. சுக்ரவாரம் என்றால், வெள்ளிக்கிழமை என்பதால், அந்தப் பெயர் வந்தது.
கோவையின் சுற்றுப்பகுதிகளில் இன்றும், வாரந்தோறும் சந்தைகள் நடக்கின்றன. உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை பெரியநாயக்கன்பாளையம் சந்தை, திங்கட்கிழமை துடியலுார் சந்தை. இதுபோலவே, 200 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை மையத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு பெரிய சந்தை தொடர்ந்து நடந்து வந்தது.
மக்கள் அந்த சந்தைக்கு வந்து தானியங்கள், பழங்கள், காய்கறி, கால்நடைகள், கைவினைப் பொருட்கள் என, எதையும் வாங்க, விற்கும் இடமாக இது இருந்தது. அப்போது வெள்ளிக்கிழமை சந்தை நடந்த பகுதி என்பதால், அந்த இடத்தை சுக்ரவாரப் பேட்டை என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே கொஞ்சம் மாறி 'சுக்ரார் பேட்' என்று மாறிவிட்டது. ஆனால் அந்தப் பெயரின் பின்னால் இருக்கும் பழைய கோவையின் வரலாறு, இன்னும் மறையாமல் வாழ்கிறது.

