/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரங்கநாதர் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் அபாரம்
/
ரங்கநாதர் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள் அபாரம்
ADDED : மார் 05, 2024 12:57 AM

கோவை;காரமடை ரங்கநாதர் பப்ளிக் பள்ளியில், பள்ளிகளுக்கிடையேயான கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. பள்ளியின் தாளாளர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார்.
இதில், தனிநபர், குழு, பாடல், திருப்பாவை, திருவாசகம் ஒப்புவித்தல், கராத்தே, சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் போட்டிகளில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, ராமகிருஷ்ணா கல்லுாரியின் முன்னாள் பேராசிரியர் வேலுச்சாமி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். பள்ளி முதல்வர் நந்தினி, ஆசிரியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

