/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 19, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே உள்ள, குஞ்சிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
மாணவி தனுஸ்ரீ, 482 மதிப்பெண் பெற்று முதலிடமும், பிருந்தாதேவி, 479 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடமும் பெற்றனர். மாணவி யோஷனா, 474 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடமும்; நந்திதா, 472 மதிப்பெண்ணுடன் நான்காமிடமும், மாணவன் ஜியோதிஷ், 471 மதிப்பெண்களுடன் ஐந்தாமிடமும் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர் மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.