UPDATED : நவ 13, 2026 06:04 PM
ADDED : நவ 13, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
சூலூர்: குழந்தைகள் தின விழாவை ஒட்டி சூலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாமளாபுரம் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் மேல்நிலைப்பள்ளி, சுல்தான்பேட்டை ஒன்றியம் இடையர்பாளையம் துவக்க பள்ளியில், சூலூர் த.வெ.க., எம்.எல்.ஏ., சுகுமார், மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.
அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கேக் வழங்கினர்.
கிட்டாம்பாளையம் நடுநிலைப்பள்ளியில், 120 மாணவ, மாணவியருக்கு, வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீ கலா, தலைமையாசிரியர் பிரசன்னாதேவி, முன்னாள் தலைவர் சந்திரசேகர் கேக் வழங்கினர்.
