/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஓவியங்கள் மீதான ரசனை இன்னும் குறையவில்லை!'
/
'ஓவியங்கள் மீதான ரசனை இன்னும் குறையவில்லை!'
ADDED : மார் 02, 2024 10:27 PM

கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரியில், கோவையை சேர்ந்த மூத்த ஓவியர் மதிநிறைச்செல்வனின், ஓவிய கண்காட்சி நடக்கிறது.
இந்த கண்காட்சியில், கலை நயமிக்க 60 மேற்பட்ட மரபுசார்ந்த மற்றும் நவீன வகை ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஓவியத்தில் ஆர்வம் உள்ளவர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பலர் கண்காட்சியை பார்வையிட்டு செல்கின்றனர்.
தனது படைப்புகள் குறித்து ஓவியர் மதி நிறைச்செல்வன் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் எனது ஓவியங்களை, காட்சிக்கு வைப்பது வழக்கம். இந்த ஆண்டு, 60 வகையான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
இன்றைக்கு நவீன ஊடகங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இருந்தாலும், மக்களுக்கு ஓவியங்கள் மீது இருக்கும் ரசனை குறையவில்லை.
இளம் தலைமுறைனர் பலர், கண்காட்சியை பார்வையிட வருகின்றனர். இதை பார்க்கும் போது, என் போன்ற ஓவியர்களுக்கு ஓவியக்கலை மீது இருக்கும் நம்பிக்கை மேலும் அதிகரிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த கண்காட்சி இன்று மாலை நிறைவடைகிறது. அதற்குள் ஒரு விசிட் அடிக்கலாமே!

