/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : பிப் 20, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என, முப்பெரும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு, பாட்டு, பேச்சு, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.