/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூலித்தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் மூன்று நம்பர் லாட்டரி; போலீசார் 'கொர்'
/
கூலித்தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் மூன்று நம்பர் லாட்டரி; போலீசார் 'கொர்'
கூலித்தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் மூன்று நம்பர் லாட்டரி; போலீசார் 'கொர்'
கூலித்தொழிலாளர் வயிற்றில் அடிக்கும் மூன்று நம்பர் லாட்டரி; போலீசார் 'கொர்'
ADDED : அக் 21, 2024 04:00 AM

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், சட்டவிரோத நம்பர் லாட்டரி கொடிகட்டி விற்பனையாகி வருகிறது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பேரூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, கேரளா லாட்டரி சீட்டுகளில் உள்ள கடைசி மூன்று எண்களை, ஆதாரமாக கொண்டு, மூன்று நம்பர் லாட்டரி விற்பனை, படுஜோராக நடந்து வருகிறது.
இதனை தடுக்க வேண்டிய போலீசாரும், கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால், கூலித்தொழிலாளர்கள் பலரும், நம்பர் லாட்டரியால் தங்கள் வருமானத்தை இழந்து வருகின்றனர்.
அவர்களின் வீடுகளில், குடும்ப செலவுகளுக்குக் கூட பணமின்றி பெண்கள் தவிக்கும் அவல நிலை உள்ளது. நமது நாளிதழில், இதுகுறித்து செய்தி வெளியிடும்போது மட்டும், போலீசார் பெயரளவிற்கு வழக்குப்பதிவு செய்கின்றனர். அதன் பின் விட்டு விடுகின்றனர்.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, புத்தூரில், அரசு நடுநிலைப் பள்ளி முன், காரில் அமர்ந்து நம்பர் லாட்டரி எழுதும் இளைஞரின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூலித் தொழிலாளர்களின் வாழ்வை, நசுக்கும் நம்பர் லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டியது போலீசார் கடமையாகும்.
இதுபோன்ற சட்ட விரோத நம்பர் லாட்டரி விற்பனைக்கு, நிருபர்கள் என்ற போர்வையில், போலி நிருபர்கள் பலரும், மிரட்டி ஆதாயம் பெற்று வருகின்றனர். அவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.