/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சிப்பொருளான மயான குளியல் அறை
/
காட்சிப்பொருளான மயான குளியல் அறை
ADDED : அக் 07, 2024 12:33 AM
வால்பாறை : வால்பாறையில், ஹிந்துக்கள் மயானத்தையொட்டி கட்டப்பட்டுள்ள குளியல் அறையுடன் கூடிய கழிப்பிடம் காட்சிப்பொருளாக மாறி வருவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில் அரசு மருத்துவமனைக்கு பின் பக்கம், ஹிந்துக்கள் மயானம் அமைந்துள்ளது. மயானத்தில் கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் குளியல்அறையுடன் கூடிய கழிப்பறை கட்டப்பட்டது.
ஆனால், இங்கு தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை காட்சிப்பொருளாக உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'ஹிந்துக்கள் மயானத்தையொட்டி கட்டப்பட்டுள்ள மயான குளியல்அறை, கழிவறையை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். மக்கள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.