/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீணாக கிடக்கிறது விளாங்குறிச்சி சாலை வாகனத்தில் மட்டுமல்ல... நடந்து போகவும் முடியலை
/
வீணாக கிடக்கிறது விளாங்குறிச்சி சாலை வாகனத்தில் மட்டுமல்ல... நடந்து போகவும் முடியலை
வீணாக கிடக்கிறது விளாங்குறிச்சி சாலை வாகனத்தில் மட்டுமல்ல... நடந்து போகவும் முடியலை
வீணாக கிடக்கிறது விளாங்குறிச்சி சாலை வாகனத்தில் மட்டுமல்ல... நடந்து போகவும் முடியலை
ADDED : நவ 04, 2025 12:27 AM

குழியால் விபத்து சிவானந்தா காலனி,திருவள்ளுவர் வீதியில், ஐ டிரஸ்ட் மருத்துவமனை எதிரே, சாலையில் நீளமான குழி உள்ளது. இரவு நேரங்களில் குழி தெரியாமல் பலர் விபத்திற்குள்ளாகின்றனர். தொடர்ந்து விபத்துகள் நடந்த போதும் குழியை மூடவில்லை.
- ஆறுச்சாமி: குப்பை கொட்டுவதை தடுங்கள் ஜி.வி.ரெசிடென்சி, 53வது வார்டு, மவுண்ட் ராயல் அபார்ட்மென்ட் எதிரே சாலையோரம், தொடர்ந்து திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. எங்கு பார்த்தாலும் மூட்டை, மூட்டையாய் குப்பை சிதறிக்கிடக்கிறது.
- ராம் மோகன்: உடைந்த சிலேப்பால் காயம் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், ரவுண்டானா எதிரில் கண்ணாடி ஸ்லாப் உடைந்து, கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடக்கின்றன. நடந்து செல்வோர், கண்ணாடி துண்டுகளால் காயப்படுகின்றனர். உடைந்தகண்ணாடி சிலாப்பை மாற்ற வேண்டும்.
- யுவராஜ்: பள்ளியருகே ஆபத்தான குழி கணபதி, 19வது வார்டு, சி.எம்.எஸ்.பள்ளி அருகே சுற்றுச்சுவர் அருகே, குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், பணி முடிந்தும் மூடப்படாமல் உள்ளது. பள்ளிக்கு அருகே மாணவர்களுக்கு, ஆபத்தான நிலையில் உள்ள குழியை, விரைந்து மூட வேண்டும்.
- அலமேலு: போக்குவரத்து நெருக்கடி அவிநாசி ரோடு, சிட்ரா அருகே, நேரு நகர் பகுதியில் தினமும் காலை, மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
- சரவணன்: தார் சாலை அமைக்கணும் விளாங்குறிச்சி ரோடு, ராகவேந்திரா அவென்யூ பகுதியில் சரியான சாலை வசதியில்லை. மண் சாலை ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. நடந்து செல்லவும், வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளது.
- நேதாஜி சுபாஷ்: விபத்து அபாயம் பூசாரிபாளையம், 74வது வார்டு, பனைமரத்துார் சந்திப்பில் சாலையின் ஒருபுறம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உயிர் சேதம் நிகழும் முன், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
- பிரபுகுமார்: உடைந்த கம்பத்தால் ஆபத்து ராமநாதபுரம், திருவள்ளுவர் நகர், 50 அடி ரோடு, அம்மணி துணி கடை அருகே, சோலார் மின்கம்பம் அடிப்பகுதி மோசமாக சேதமடைந்துள்ளது. இரும்பு கம்பம் துருப்பிடித்து பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. சாலையில் விழும் அபாயம் உள்ளதால், உடைந்த கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.
- சவுமியா: சாலையில் தேங்கும் மழைநீர் சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், பேஸ் - 1, 60வது வார்டில், ஒரு வீதியில் மட்டும் ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. தண்ணீர் குழாய் பதிப்பு பணிகளுக்கு பின் சாலையை சீரமைக்கவில்லை. மேடு, பள்ளங்களாக உள்ள சாலையில், மழை தண்ணீரும் ஆங்காங்கே நிரம்பி நிற்கிறது.
- ராஜன்: இருளால் அச்சம் தெற்கு மண்டலம், 98வது வார்டு, 'எஸ்.பி - 39 பி- 12' என்ற எண் கொண்ட கம்பம் சேதமடைந்ததால்மாற்றப்பட்டது. புதிய கம்பத்தை மாற்றிய பின், அதில் தெருவிளக்கு இணைப்பு கொடுக்கவில்லை. இருளில் மூழ்கும் வீதியில் மாலை 6.30 மணிக்கு மேல் வெளியே செல்லவே அச்சமாக உள்ளது.
- திரு:

