/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி.,
/
ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி.,
ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி.,
ஆயுதப்படை போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி.,
ADDED : நவ 24, 2024 11:49 PM

கோவை; ஆயுதப்படை போலீசாரிடம், மேற்கு மண்டல ஐ.ஜி., குறைகளை கேட்டறிந்தார்.
கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கான கவாத்து மற்றும் அரசால் வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள், உடை பொருட்களுக்கான ஆய்வை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் மேற்கொண்டார்.
இதில், பெண் மற்றும் ஆண் போலீசார் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்று தங்களது உடல் வலிமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, சட்ட விரோத கூட்டத்தை கலைத்தல் உட்பட பல்வேறு பயிற்சி முறைகள் நடந்தன.
ஆய்வின்போது, உடைப்பொருட்கள் மற்றும் அரசு வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, ஐ.ஜி., பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ஆயுதப்படை போலீசாருக்கு சட்ட ஒழுங்கு மற்றும் கைதி வழிக்காவல், முக்கிய பிரமுகர் வருகை போன்ற இதர பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து போலீசாருக்கான குறைகளையும் கேட்டறிந்தார். கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் உடனிருந்தார்.