/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை... மாற்ற வேண்டும் ! அரசிடம் கேட்கின்றனர் விவசாயிகள்

ADDED : டிச 25, 2025 05:09 AM

கோவை, :விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், கலெக்டர் பவன்குமார் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தை மாற்ற, தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, விவசாயிகள் பேசினர்.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின், மாநில பொது செயலாளர் கந்தசாமி பேசி யதாவது:
தமிழகத்தில் 15 ஆண்டுகளாக வனவிலங்குகள், பட்டா நிலங்களில் நுழைந்து, விவசாய பயிர்களை சேதம் செய்கின்றன; மனித உயிர்களை கொல்கின்றன.
சூலூர், கோத்தாரி போன்ற ஊர்களில், காட்டுப்பன்றிகள் விளை பயிர்களை சேதப்படுத்துகின்றன. சிறுத்தைகள் உணவு தேடி நகரத்துக்குள் வருகின்றன. வழியில் ஆடு, மாடு, மனிதனை கொல்கின்றன. கேரளத்தில் 1972ம் ஆண்டு வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என, அம்மாநில அரசு மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்பி உள்ளது.
அதில் விவசாயிகள் மற்றும் மக்களின் சிரமங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் இது போன்ற முன்மொழிவுகளை அனுப்பி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து கலெக்டர், முதல்வருக்கு பரிந்துரை கடிதம் எழுத வேண்டும்.
இவ்வாறு கந்தசாமி பே சினா ர்.