ADDED : அக் 18, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : போத்தனுார் ரயில்வே யார்டில் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. ரயில்வே ஊழியர்கள் ரயில்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு ரயிலில், 45 வயது மதிக்கத்தக்க, பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.
இதைக்கண்ட ஊழியர்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த பெண்ணை சோதனை செய்தனர். அவர் கத்திரிப்பூ நிற சுடிதாரும், பச்சை நிற பேன்ட்சும் அணிந்திருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.