தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் டிச.5 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் டிச.5 வரை விண்ணப்பிக்கலாம்

மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் டிச.5 வரை விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 13, 2026 04:48 PM

ADDED : நவ 13, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 04:48 PM ADDED : நவ 13, 2026 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கிராமப்புற மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2026–27ம் ஆண்டுக்கான ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. டிச.5 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம். 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர் அல்லது குடும்பத்தினர் பெயரில் சொந்த நிலம் இருக்கக் கூடாது. ஏற்கனவே கால்நடை பராமரிப்புத்துறையின் வாழ்வாதார திட்டங்களில் பயனடைந்திருக்கக் கூடாது. பயனாளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். தேர்வு செய்த பின்பு வழங்கும் ஆடுகளை இரண்டு ஆண்டுகள் பராமரிக்க உறுதியளிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us