/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தேர் செட் அமைக்கும் பணி சுணக்கம்
/
குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தேர் செட் அமைக்கும் பணி சுணக்கம்
குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தேர் செட் அமைக்கும் பணி சுணக்கம்
குழந்தை வேலாயுத சுவாமி கோவில் தேர் செட் அமைக்கும் பணி சுணக்கம்
ADDED : மே 12, 2025 12:14 AM
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் பழமையான தேர் பழுதடைந்ததால், இரண்டரை ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் நன்கொடையாளர்கள் வாயிலாக, 60 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தேர் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிலில் தை மாதம் தேரோட்டம் நடைபெற்றது. தேர் நிறுத்தும் இடத்தில், தேருக்கு பாதுகாப்பு செட் நிரந்தரமாக அமைக்க, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதை அடுத்து கோவையை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் இந்த செட்டை அமைத்து தருவதாக உறுதியளித்தார். தேர் செட் கட்டுமான பணிகள், மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து கோவில் செயல் அலுவலர் வனிதாவிடம் கேட்டபோது, ''பல்வேறு காரணங்களால், பணிகள் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இன்னும் பத்து நாட்களில் தேருக்கு பாதுகாப்பு செட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.