/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நோ - பார்க்கிங்' பகுதியில் நிறுத்தாத வாகனத்துக்கு அபராதம் விதிப்பு: போலீஸ் தவறை சுட்டிக்காட்டிய இளைஞர்

ADDED : பிப் 04, 2024 02:17 AM

பொள்ளாச்சி;கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலீசார், இலக்கை அடைய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது, வாகன ஓட்டுனர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
ரோட்டில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை குறிப்பெடுத்துக் கொண்டு, 'நோ - பார்க்கிங்'ல் நிறுத்தியதாகவும், 'சீட் பெல்ட்' அணியவில்லை என்றும், 500 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த, 1ம் தேதி பொள்ளாச்சியை சேர்ந்த இளைஞர் கணேஷ் என்பவர், குஞ்சிபாளையத்துக்கு குமரன் நகர் கல்லுக்குழி வழியாக காரில் சென்றார். 'நோ - பார்க்கிங்' பகுதியில் அவரது கார் நிறுத்தாத நிலையில், விதிமீறி நிறுத்தியதாக மேற்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
அவரது மொபைல்போனுக்கு அபராதம் விதிப்பு குறித்து வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தவர், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார். அங்கு சரியான விளக்கம் கிடைக்காததால், டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.
இளைஞர் கூறுகையில், ''நோ - பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், என் காரில் உள்ள ஜி.பி.எஸ்., கருவியில், வாகனம் எங்கு சென்றது என்ற விபரம் உள்ளது.
''இது குறித்து, போலீசார் மற்றும் டி.எஸ்.பி.,யிடம் ஆவணங்களை காண்பித்து விளக்கம் அளித்தேன். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, டி.எஸ்.பி.,யும் உறுதியளித்தார்,'' என்றார்.
அபராதம் விதிக்கும் இலக்கை அடைய யாருக்கெல்லாம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை, குறுஞ்செய்தி வரும் போதும், 'எம் பரிவாகன்' செயலில் பார்க்கும் போது தான் தெரியவரும்.