ADDED : ஆக 21, 2026 06:12 PM
சூலுார்: சூலுாரில் அடுத்தடுத்து இரு கோவில்களில் திருட முயற்சி நடந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூலுார் திருச்சி சாலையில் எழுவக்கரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைக்க முயற்சி செய்து, முடியாததால், அருகில் இருந்த ஒர்க்சாப்பில் புகுந்து பொருட்களை திருடியுள்ளான். ரயில்வே பீடர் சாலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு மாகாளியம்மன் கோவில் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து, உண்டியலை உடைத்து பணத்தை திருடி தப்பியுள்ளான்.
நேற்று காலை பூஜாரி கோவிலை திறந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார், தடயங்கள் மற்றும் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள், மாகாளியம்மன் கோவிலில் விசாரித்தனர். திருட்டு சம்பவத்தால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
