/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதி
/
வாராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதி
ADDED : செப் 12, 2025 10:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதி சிறப்பு பூஜை நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாராஹி மந்திராலயத்தில் நவசக்தி வாராஹி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆவணி மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்வையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.