/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தில் 5 கோடி பனை இருக்கு! வேளாண் பல்கலை பேராசிரியர் தகவல்
/
தமிழகத்தில் 5 கோடி பனை இருக்கு! வேளாண் பல்கலை பேராசிரியர் தகவல்
தமிழகத்தில் 5 கோடி பனை இருக்கு! வேளாண் பல்கலை பேராசிரியர் தகவல்
தமிழகத்தில் 5 கோடி பனை இருக்கு! வேளாண் பல்கலை பேராசிரியர் தகவல்
ADDED : செப் 06, 2025 11:59 PM

கோவை : பனை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கான, தொழில் முனைவோர்களை உருவாக்கக் கூடிய கருத்தரங்கம், இலங்கையில், வவுனியா பல்கலையில் சமீபத்தில் நடந்தது. தமிழ்நாடு வேளாண் பல்கலை விரிவாக்க கல்வி இயக்ககத்தின் பயிற்சி பிரிவு பேராசிரியர் ஆனந்தராஜா பங்கேற்றார்.
அவர் கூறியதாவது:
இலங்கை பனை வளர்ச்சி வாரிய மதிப்பீட்டின் படி, 1.1 கோடி பனை மரங்கள் காணப்படுகின்றன. இதன் மூன்றில் இரு பங்கு பனைகள், யாழ்ப்பாணம் மாவட்டத்திலும், அதையொட்டியுள்ள கடலோரத் தீவுகளிலும் காணப் படுகின்றன.
மன்னார் தீவிலும், முல்லைத்தீவிலும் பெருமளவு பரப்பில் பனைகள் நெருக்கமாக காணப்படுகின்றன. தற்போது, அங்கு நடந்த உள்நாட்டுப் போரால் பனைவளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 10 கோடி பனை மரங்கள் உள்ளதாக கணக்குகள் சொல்கின்றன. அவற்றில், 5 கோடிக்கு மேலுள்ள பனைகள் தமிழகத்தில் இருக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2 கோடிக்கு மேற்பட்ட பனை மரங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய இளைஞர்கள் வேளாண்மையிலும், பனை சாகுபடியிலும் ஈடுபடுத்திக் கொள்ள மறுக்கிறார்கள். இத்தொழிலில் ஈடுபடும் மக்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் உப தொழில்களை மேம்படுத்த பொருளாதார ரீதியிலான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்