/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடையாள எண் இருந்தால் பயன்கள் ஏராளம்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
/
அடையாள எண் இருந்தால் பயன்கள் ஏராளம்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
அடையாள எண் இருந்தால் பயன்கள் ஏராளம்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
அடையாள எண் இருந்தால் பயன்கள் ஏராளம்; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
UPDATED : பிப் 25, 2025 06:31 AM
ADDED : பிப் 24, 2025 10:46 PM

சூலுார்,; தனித்துவ அடையாள எண்ணால் ஏராளமான பயன்கள் கிடைக்கும், என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகளின் சாகுபடிக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக வழங்குகின்றன. மத்திய அரசு வழிகாட்டுதல் படி விவசாயிகளின் பெயர், நிலங்கள் மற்றும் சாகுபடி விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து, அனைத்து விவசாயிகளுக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்க, 'பார்மர்ஸ் ரிஜிட்டர்' எனும் செயலி வாயிலாக விவசாயிகளின் விபரங்கள் பெறப்பட்டு அடையாள எண் வழங்கும் பணி நடக்கிறது.
சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குனர் கண்ணாமணி கூறியதாவது:
இரு ஒன்றியங்களிலும் வருவாய் கிராமம் வாரியாக முகாம் நடக்கிறது. வேளாண், தோட்டக்கலைத்துறை, தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சமுதாய கூடம் உள்ளிட்ட பணி நடக்கும் இடங்களுக்கு விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து அடையாள எண்ணை பெற்று செல்கின்றனர். இனி வரும் காலங்களில், விவசாயம் சார்ந்த அனைத்து மத்திய, மாநில அரசு திட்டங்களின் பயன்களை பெற, இந்த அடையாள எண் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
முகாமுக்கு வரும் விவசாயிகள், நில உடமை சிட்டா, ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.